
உ.பி., தலைநகர் லக்னோவில், சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, இந்தோனேஷியா
வின் கிரிகோரியா மரிஸ்கா மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சமீர் வர்மா, சாய் பிரனீத் மோதினர். மொத்தம் 44 நிமிடம் வரை சென்ற போட்டியில் அசத்தலாக ஆடிய சமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
English summary:
Lucknow: Sindh Syed Modi India's badminton champion taker in the series.