புதுடில்லி: பிஎஸ்எப் வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக வீரர் தேஜ் பகதூர் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராணுவ வீரர் ஒருவர், தான் அடிமைப்போல் நடத்தப்படுவதாக புகார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ வீரர் சிந்தவ் ஜோகிதாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ: விடுமுறையை இரண்டு நாள் நீட்டித்ததற்காக எனக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்ததால், 7 நாள் காவலில் வைத்தனர். என்னை அடிமைப்போல் நடத்தினர். போதிய உணவு வழங்கப்படவில்லை. உயிர் வாழவே உணவு வழங்கினர். உதவி கேட்டு பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. ராணுவம் வெளியிட்ட வாடஸ் அப் எண் மூலம் புகார் அளித்தும் பதில் கூட வரவில்லை. பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியதற்காக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தும்படி ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ராணுவ வீரர் ஜோகிதாஸ் தொடர்ச்சியாக தவறு செய்து வந்தார். இதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்றனர்.