Monday, 27 March 2017
Wednesday, 8 March 2017
லக்னோவில் பயங்கரவாதி பதுங்கல்: துப்பாக்கிச்சூடு
லக்னோ: உ.பி., மாநிலம் லக்னோவில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர், ஒரு கட்டடத்தை சுற்றி வளைத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கிறது.
தாகூர்கஞ்ச் பகுதியையொட்டிய பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த சைபுல்லா என கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் தற்போது பரபரப்பு நிலவுகிறது.

English summary:
Lucknow, UP, Lucknow, the state anti-terrorism unit in the wake of reports that the terrorist ambush of soldiers,
Saturday, 4 March 2017
மேலதிகாரிகள் மீது புகார் கூறிய ராணுவ வீரர் தற்கொலை
மும்பை: தனது மேலதிகாரிகளால் கொத்தடிமையாக நடத்தப்பட்டதை சமூக வலைதளங்கள் அம்பலப்படுத்திய ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் ராய் மேத்யூ, 33வயது ராணுவ வீரர், இவர் தாம் பணியாற்றிய இடத்தில் மேல் அதிகாரிகளால் பல வகைகளில் கொத்தடிமையாக ( ஆர்டலியாக) இருந்து வந்ததையும்,
தன்னை போன்று தனது சக ராணுவ வீரர்கள் ஆர்டலிகளாக பணியாற்றியதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இது வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக ராணுவம் உயர்மட்டவிசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் கடந்த பிப். 25-ம் தேதி ராய் மேத்யூ திடீரென காணாமல் போனார். போலீசார் தேடி வந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் தியோலாலி கண்டோன்மென்டில் பாழடைந்த கட்டடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
English summary:
MUMBAI: Social networking sites carried out by his superiors for exposing sweatshop soldier was found dead in mysterious circumstances.

Monday, 30 January 2017
'காஷ்மீர் பனிச்சரிவுக்கு பாக்., குண்டு வீச்சு காரணம்
புதுடில்லி: ''உலகளாவிய வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாற்றங்கள், பாக்., ராணுவத்தினர் பீரங்கி குண்டுகளை வீசுவது உள்ளிட்ட காரணங்களால், ஜம்மு - காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது,'' என, ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி, 15க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அங்கு அவ்வப்போது பனிச்சரிவு ஏற்பட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது.
அடிக்கடி தாக்குதல்:
இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில், இதற்கு முன் பனிச்சரிவுகள் ஏற்பட்டதில்லை. ஆனால், சமீபகாலமாக, பாக்., ராணுவம், கனரக பீரங்கிகள், துப்பாக்கிகளால் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மண் உறுதித் தன்மையை இழந்து, பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. பனிச்சரிவுகள் ஏற்பட, உலகளாவிய வெப்ப மயமாதலும், சுற்றுப்புறவியல் மாற்றமும் பிற காரணங்கள்.
வீரர்கள் வாபஸ்:
ஜம்மு - காஷ்மீரில், கடந்த, 72 மணி நேரத்தில், பலமுறை பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த மூன்று நாட்களுக்கு இதே போன்ற சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பனிச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து, வீரர்களை வாபஸ் பெற்றுள்ளோம். இருப்பினும், சில பகுதிகள் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடக்க அதிகம் வாய்ப்பு உள்ளவை. எனவே, அங்கு, வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னுரிமை:
பனிச்சரிவில் சிக்கி இறந்த வீரர்களின் உடல்களை மீட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னுரிமை தந்து பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, 26 January 2017
காஷ்மீரில் பனிச்சரிவு; 2 வீரர்கள் மாயம்
ஜம்மு: பனிச்சரிவில் சிக்கிய 2 ராணுவ வீரர்களை தேடும் பணி நடந்து வருகிறது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஷ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ முகாமும் சிக்கியது. இதில் 4 வீரர்கள் மீட்கப்பட்டனர். 2 வீரர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
English summary:
Jammu: 2 soldiers injured in avalanche search and Kashmir kush in jammu ongoing landslide occurred in the area. The base hit. In which 4 soldiers were rescued. 2 players disappeared. The task has been actively looking for them.

Thursday, 19 January 2017
ராணுவ வீரர்களுக்கு நவீன ஹெல்மெட் வழங்க மத்திய அரசு முடிவு
புதுடெல்லி - ராணுவ வீரர்களின் நீண்ட கால கோரிக்கையான, நவீன வசதிகளை உள்ளடக்கிய ஹெல்மெட் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிக பாதிப்பு:
இந்தியாவில் எல்லைப் பாதுகாப்பு படையினர், பாரா மிலிட்டரி படையினர், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் என ராணுவத்தில் முக்கிய படைப்பிரிவினர் எதிரி நாடுகளின் தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
அரசுக்கு கோரிக்கை:
பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் பழைய தொழில்நுட்பங்களை கொண்டிருப்பதால், நவீன வசதிகளை உள்ளடக்கிய கருவிகள், புல்லட் ஃப்ரூப் உடைகள், ஹெல்மெட் ஆகியவை வழங்கவேண்டும் என அவர்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தனர்.
மத்திய அரசு ஒப்பந்தம்;
இந்நிலையில், தற்போது 1.58 லட்சம் நவீன ஹெல்மெட்களை தயாரிப்பதற்கு கான்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 170 கோடி ரூபாய் ஆகும். நவீன ஹெல்மெட்கள் மூன்று ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும்.
உயிரிழப்பு குறையும்;
இந்த வகை ஹெல்மெட்கள் 9.மி.மீ அளவுடைய துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு அருகிலிருந்து தாக்கினாலும், தாங்கும் வலிமை படைத்தது. மேலும், தகவல் தொடர்பு சாதனங்களை உள்ளடக்கிய வசதிகளை ஹெல்மெட் கொண்டிருக்கும். நவீன வசதிகள் கொண்ட உபகரணங்கள் வழங்கப்படுவதால் ராணுவத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
New Delhi - Soldiers of the long-term demand, the central government has decided to offer modern facilities, including a helmet.