
தொலைக்காட்சி சேனல்களில் நடிகைகள் நடத்தும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீப்ரியா. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்தும் நடிகைகள் பற்றி அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
3 குழந்தைகள்:
தனக்கு 3 குழந்தைகள் மற்றும் அனுபவம் உள்ளதால் பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்த தகுதி உள்ளது என நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.(மகாபாரதத்தில் வரும் 101 பிள்ளைகளின் தாயான காந்தாரியின் தகுதிகளை நினைத்து பாருங்கள்)
வா போ:
நான் வித்தியாசமானவள், நான் வித்தியாசமாக சிந்திப்பவள். அதனால் பலர் என்னை மதிக்கிறார்கள் என மற்றொரு நிகழ்ச்சி தொகுப்பாளர் தெரிவித்துள்ளார். மக்களை வா போ என்று அழைப்பது வித்தியாசமா?
கட்டப்பஞ்சாயத்து நடிகை :
கட்டப் பஞ்சாயத்து நடிகையின் ஆடியோ இன்டர்வியூ: பலமணிநேரம் கவுன்சிலிங் அளித்த அனுபவம் தனக்கு உள்ளது என்கிறார்..!!
மேடம் :
ப்ரொபஷனல் கவுன்சிலிங் என்பது சம்பந்தப்பட்டவர் மற்றும் கவுன்சிலர் இடையே நடத்தப்படும், கேமராவுக்கு முன்பு நடத்தி உலகிற்கே தெரிவிப்பது இல்லை நிகழ்ச்சி தொகுப்பாளர் மேடம்.
English summary:
Actress Sripriya has blasted two actresses who are hosting counselling shows on TV channels.