
இந்திய வானிலை ஆய்வு மையம், 2016ம் ஆண்டுக்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது:
* கடந்த, 1901ம் ஆண்டில் இருந்து, பதிவான வெப்ப நிலைகளுடன் ஒப்பிடுகையில், 2016ல், வெப்பம் அதிகம். ஆண்டு சராசரியைவிட, 0.91 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெயில் பதிவானது
* மிகவும் அதிகமாக, ராஜஸ்தான் மாநிலம், பலோடியில், 51 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது
* கடந்த, 2016ல், கடும் மழை, அதிக வெயில் என பல்வேறு தட்ப, வெப்பநிலை காரணங்களால், 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
* இதில், 40 சதவீதம் பேர், மழை, வெள்ளத்தால் இறந்தவர்கள்; 40 சதவீதம் பேர், கடும் வெயிலுக்கு பலியாகினர்
* வெயிலுக்கு, 700க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில், ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
* கடும் குளிருக்கு, 53 பேரும், மின்னல் தாக்கி, 415 பேரும் பலியாகினர். ஒடிசாவில், 132 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்து உள்ளனர்
* பீஹாரில், 146 பேர் உட்பட, கடும் மழை, வெள்ளத்துக்கு, 475 பேர் உயிரிழந்துள்ளனர்
* கடந்த ஆண்டில், தமிழகத்தை தாக்கி, 18 பேரை பலி வாங்கிய, வர்தா புயல் உட்பட, வங்கக் கடலில், நான்கு புயல்கள் ஏற்பட்டன
* கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை காலத்தில், இயல்பைவிட, 55 சதவீதம் குறைவான அளவு மழை பெய்தது. கடந்த, 1901ல் இருந்து பதிவான, மிகவும் குறைவான மழையளவுகளில், இது 5வது இடமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English summary:
New Delhi: In the past, the absence of 115 years, in 2016, sunlight . In that year, different climates, the temperature due to the death of 1,600 people, and not only because of the sun, 700 people have died.