
Monday, 27 March 2017
ஓ.பி.எஸ்., ஆதரவாளர் தற்கொலை

Wednesday, 8 March 2017
ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவாக குவியும் தொண்டர்கள்

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் துவங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் 10 ஆயிரம் தொண்டர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், எதிர்பார்த்ததை விட அதிகளவில் தொண்டர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால், அங்கு இருக்கைகள் நிரம்பின. தொண்டர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் போராட்டம் நடக்கும் மைதானம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
English summary:
Chennai made by former Chief Minister Panneerselvam several thousand volunteers participated in the hunger strike. As a result, traffic was affected in that way.