ஸ்ரீநகர்:காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சினார் பக்கில் சூன்டேகுல் குடிசை பகுதியில் நேற்று(மார்ச்-27) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீயை அணைப்பதற்காக போராடிய இரு வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.காற்று வேகமாக வீசியதால் பல குடிசைகள் உள்பட சில பெரிய வீடுகளும் எரிந்து சாம்பலாயின. விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Tuesday, 28 March 2017
ஜம்மு-காஷ்மீரில் அமைச்சர் வீட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்திலுள்ள பி.டி.பி., கட்சியை சேர்ந்த அமைச்சர் பரூக் அந்த்ராபி வீட்டை குறி வைத்து பயங்கரவாதிகள் இரவில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீசார் காயமடைந்தார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 4 ரைபில் துப்பாக்கியையும் திருடிச்சென்றனர். ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தியின் நெருங்கிய உறவினரான அமைச்சர் பரூக் அந்த்ராபி, வீட்டில் இல்லாததால் தாக்குதலில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.
Friday, 10 March 2017
பயங்கரவாதியை உதறிய தந்தைக்கு பார்லிமென்டில் பாராட்டு
புதுடில்லி : உ.பி.,யில் சுட்டுக் கொல்லப்பட்ட, ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதி சயிபுல்லாவை உதறி தள்ளிய, அவனது தந்தைக்கு, பார்லிமென்டில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ம.பி.,யில், போபால் - உஜ்ஜயின் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, உ.பி.,யின் லக்னோவில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சயிபுல்லாவை, போலீசார் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர்.
உ.பி.,யின் கான்பூரில் வசிக்கும், அவனது தந்தை முகமது சர்தாஸ், 'நான் ஒரு இந்தியன்; நாட்டுக்கு எதிராக செயல்பட்ட சயிபுல்லா ஒரு துரோகி; அவன் உடலை வாங்க மாட்டேன்' என்றார்.பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், சர்தாஸின் நடவடிக்கைக்கு, பார்லிமென்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாவது கட்டத்தின் முதல் நாளான நேற்று, லோக்சபாவில் இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய சயிபுல்லாவை உயிருடன் பிடிப்பதற்கு, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது பலனளிக்கவில்லை. கொல்லப்பட்டது, தன் மகனாக இருந்த போதும், நாட்டுப்பற்றுடன் செயல்பட்ட, சர்தாஸை பாராட்டுகிறேன்.
தேசத்துக்கு எதிராக செயல்பட்ட தன் மகனை துரோகி எனக்கூறி, உடலை கூட வாங்க மறுத்துள்ள சர்தாஜை, அனைத்து, எம்.பி.,க்களும் பாராட்டுவர் என,எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து, அனைத்து, எம்.பி.,க்களும் மேஜையை தட்டி, ராஜ்நாத் சிங்கின் கருத்தை ஆமோதித்தனர்.
என்.ஐ.ஏ., விசாரணை:
லோக்சபாவில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேலும் கூறியதாவது:ம.பி.,யில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் உ.பி.,யில் பயங்கரவாதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும்.இந்த சம்பவத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின்படி, ம.பி., - உ.பி., அரசுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு, ஆறு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

பயங்கரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதா சந்தேகம்
மதுரை: மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கச்சத்தீவை மீட்பது தமிழர்களின் உரிமை. கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அதேநேரத்தில், கச்சத்தீவை மீட்பது மட்டும் தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வாக அமையாது.
மீனவர்களின் போராட்டத்தில் அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு நிலைமையை மேலும் மோசமடைய செய்யக்கூடாது. அரசியல் கட்சிகள் மோசமான விளையாட்டை விளையாடி வருகின்றன.
போராட்டக்காரர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு அளிப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும். கொல்லப்பட்ட மீனவருக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
போராட்டக்காரர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக சந்தேகம் வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எச்சரிக்கை விடுத்தேன். இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
Madurai Airport pon, the Minister told the press, said that the rights of innocent and unarmed Tamils reclaiming. The federal government will take action to recover the innocent and unarmed. At the same time, as a solution to the problem of the Tamils should not only restore innocent and unarmed.

Wednesday, 8 March 2017
12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
லக்னோ: உ.பி.,யின் லக்னோவில் வீட்டில் பதுங்கிய பயங்கரவாதியை, 12 மணி நேர போராட்டத்துக்கு பின், பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ரயில் குண்டுவெடிப்பு:
ம.பி.,யில், போபால் - உஜ்ஜயின் ரயிலில், நேற்று(மார்ச்,7) காலை, வெடிகுண்டு வெடித்ததில், எட்டு பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பயங்கரவாதி ஒருவன், உ.பி.,யின் லக்னோவில் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு, மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
வீட்டில் பதுங்கல்:
லக்னோவின் புறநகர் பகுதியான, காகோரியில் உள்ள ஒரு வீட்டில், பயங்கரவாதி ஒருவன் பதுங்கியிருப்பதை, உ.பி., போலீசாரும், பயங்கரவாத தடுப்புப் படையினரும் உறுதி செய்தனர். அதன்படி, அந்த வீட்டை அவர்கள் சுற்றி வளைத்தனர். அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
துப்பாக்கிசூடு:
போலீசார் தன்னை சுற்றி வளைத்ததை உணர்ந்த பயங்கரவாதி, அவர்கள் மீது துப்பாக்கியால் சுடத் துவங்கினான். அவனை உயிருடன் பிடிக்க, போலீசார் திட்டமிட்டனர். இருப்பினும் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். வீட்டில் இரண்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைபற்றப்பட்டன.
நேற்று மாலை, 3:30 மணிக்கு துவங்கிய இந்த நடவடிக்கையானது 12 மணி நேரத்துக்கு பின் இன்று அதிகாலை 3.40 மணிக்கு முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
English summary:
Lucknow : UP, Lucknow in terrorist crouching at home, after a 12-hour strike, was assassinated by anti-terrorism unit.