
Friday, 24 March 2017
பிரிட்டன் பார்லி. அருகே தாக்குதலுக்கு: ஐ.எஸ்.பொறுப்பேற்பு

Wednesday, 8 March 2017
துரோகி எனது மகனில்லை: பயங்கரவாதியின் தந்தை கண்ணீர்

தேசவிரோதம்:
இது தொடர்பாக சைபுல்லாவின் தந்தை சர்தாஜ் கூறியதாவது: ஒரு துரோகி எனது மகனாக இருக்க முடியாது. நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இங்கு தான் பிறந்தோம். எங்களது மூதாதையர்களும் இங்கு தான் பிறந்தனர்.
சைபுல்லா செயல் நாட்டின் நலனுக்கு எதிரானது. ஒரு தேச விரோதியின் உடலை நாங்கள் வாங்க மாட்டோம். அவர் ஏன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார் என்பது பற்றி தகவல் இல்லை.
கடந்த 2 மாதத்திற்கு முன்னர் வேலைக்கு செல்லாததால், சைபுல்லாவை நான் அடித்தேன். கடந்த திங்களன்று எனக்கு போன் செய்து, நான் சவுதி செல்லப்போவதாக சைபுல்லா தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்ச்சி:
சைபுல்லாவின் உறவினர் ஒருவர் கூறியதாவது: சைபுல்லாவின் செயல் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் எங்களிடம் நன்றாக தான் நடந்து கொண்டார். தினமும் தொழுகை நடத்தினார். சைபுல்லா இவ்வாறு செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Lucknow: Lucknow, killing ISIs., The body of terrorist saifulla said his father could not afford.
காபூல் மருத்துவமனை மீது தொடர் தாக்கு

மருத்துவமனையில் தாக்குதல் :
மருத்துவமனை மீது வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. 5 தற்கொலைப்படையினர் மருத்துவமனைக்குள் புகுந்துள்ளதாகவும், அதில் ஒருவர் மருத்துவமனை வாசல் அருகே தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இதுவரை 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், மருத்துவமனைக்குள் சிக்கி உள்ள டாக்டர்கள் தகவல் அனுப்பி உள்ளனர்.
English Summary:
KABUL: Afghanistan on a military hospital in the capital Kabul have been carrying out terrorist attacks.