
கேரளாவில், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள், தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இத்துறை சார்பில் பழங்கால நாணய கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக எடுத்துச் செல்லப்படும் நாணயங்கள் விற்கப்படுவதாகவும், அதற்கு பதில் போலி நாணயங்கள் வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து, கேரள பண்பாட்டுத்துறை அமைச்சர், ராமச்சந்திரன், துறை செயலர் ராணி ஜார்ஜ் ஆகியோருக்கு நாணய ஆராய்ச்சியாளர், பீனா சரசன் மனு அனுப்பினார். ராணி ஜார்ஜ் கூறுகையில், ''வெளிச் சந்தையில் விற்கப்படுபவை, தொல்பொருள் துறையிடம் உள்ள நாணயங்கள் என கூற முடியாது. துறை வசம் உள்ள நாணயங்களை படத்துடன் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.