புதுடில்லி: ரயில்வே துறையில், ஆண்டுதோறும் ஏற்படும், 34 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை குறைக்க, கட்டண சலுகையில் கை வைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, மூத்த குடிமகன்கள் வயது வரம்பை, 60ல் இருந்து 70 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
53 வகையான சலுகைகள்:
ரயில்வே துறையில், பல்வேறு பிரிவுகளின் கீழ், 53 வகையான கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாற்றுதிறனாளிகள், மூத்த குடிமகன்கள், மாணவர்கள், ராணுவ வீரர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆகியோர் பலன் அடைந்து வருகின்றனர். இதற்காக, ஆண்டுதோறும், 1,600 கோடி ரூபாய் செலவாகிறது. இதில் சில கட்டண சலுகைகள், 1950 ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மூத்த குடிமகன்களின், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு பயண கட்டணத்தில், 40 சதவீதமும்; 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பயண கட்டணத்தில், 50 சதவீதமும் தள்ளுபடி சலுகையாக அளிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நஷ்டத்தை ஈடுபட்ட கட்டண சலுகையில் கை வைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மூத்த குடிமகன்கள் என்பது, 60 வயதில் இருந்து, 70 வயதாக உயர்த்தப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, மூத்த குடிமகன்களுக்கு அளிக்கப்படும் கட்டண சலுகைக்கான தொகையை, சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும்; மாணவர்களுக்கான கட்டண சலுகை தொகையை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும்; ராணுவ வீரர்களுக்கான கட்டண சலுகை தொகையை, பாதுகாப்பு அமைச்சகமும் ரயில்வே துறைக்கு தர வேண்டும் என கோரிக்கை விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary:
Railway Ministry has decided to reduce the loss of Rs 34,000 crore annually in the railways, with a fee offering. As a step, senior citizens are planning to increase the age limit from 60 to 70.