புதுடில்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
ிரதமர் மோடி - முதல்வர் பன்னீர் செல்வம் இடையேயான சந்திப்பின்போது, தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதாக கூறிய பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என கூறினார்.
இதன் வெளிப்பாடாக, தமிழகத்தில் நிலவும் சூழல் காரணமாக ஜல்லிக்கட்டு வழக்கில் அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ப்பை வெளியிட கூடாது சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதாக அட்வகேட் ஜெனரல் முகுல் ரத்தோகி தெரிவித்தார்.மேலும், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என
வும் அறிவுறுத்தினார்.
காளையை நீக்கும் பிரிவு சேர்ப்பு:
இதையடுத்து, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிருந்து காளையை நீக்கம் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சட்ட வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.
இந்த சட்ட வரைவுக்கு முறையே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, சட்ட துறை, உள்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து சட்ட வரைவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று இரவு அல்லது நாளை காலை ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்குவார். இதற்காக, கவர்னர் வித்யாசாகர் நாளை சென்னை வருகிறார்.
அவசர சட்டம் நாளை அமலுக்கு வரும் நிலையில் நாளை மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களின் எழுச்சி போராட்டம் வெற்றியின் விளம்பை தொட்டுள்ளது.
English summary:
NEW DELHI: The Union Law Ministry had issued Ordinance jallikattu. Animals should not be displayed in the bill designed to remove the bull from the list. The manifestation of the state, due to the circumstances in the case next week jallikattu not disclose the verdict to the Supreme Court was requested on behalf of the central government. Advocate General Mukul rattoki said that this request was approved, to issue ordinance jallikattu urged the Tamil Nadu government.