சென்னை: போயஸ் தோட்ட இல்லத்தில் அதிக எண்ணிக்கையிலான போலீசாரும், உயரதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரமீறல் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில், போலீசார் சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவின் முக்கியமான அணியைச் சேர்ந்த, நன்கு பயிற்சியளிக்கப்பட்ட 240 பேர் இன்னமும் பணியில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. . சென்னை மாநகர போலீசை சேர்ந்த அதிகாரிகள்- போலீசார் என கூடுதலாக 60 பேரும் அங்கு பாதுகாப்பு பணி என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையை சீரழிக்கும் நிலை :
தற்போது போயஸ் தோட்ட இல்லத்தில், அரசியல் சட்டரீதியிலான அதிகாரம் படைத்தவர்களோ மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களோ யாரும் இல்லை. இந்த நிலையில், அங்கே இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான போலீசாரும், உயரதிகாரிகளும் பாதுகாப்பு என்ற பெயரில் பணியில் நியமிக்கப்பட்டிருப்பது, போலீசாரை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்தும் இழிவான செயலாகும். காவல்துறையை சீரழிக்கும் இத்தகைய அதிகார மீறல்களை, முதல்வர் பன்னீர் செல்வம், போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தி.மு.க. சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
English Summary:
Chennai: Poes Garden residence of the high number of police officers also engaged in security work must be halted immediately unrespectable. Otherwise we will take legal action as the DMK treasurer MK Stalin said.