
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹை ட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவினர் 22 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரும் 15-ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய உள்ளதாக உறுதி அளித்த கூறப்படுகிறது இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வு:
மேலும் தற்போது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary:
Pudukkottai: the federal government's carbon plan high figure, was held for 22 days in protest against the neduvasal temporarily.