
வழக்கு:
சபரிமலையில் பத்து முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
போராட்டங்கள்:
இந்நிலையில் அடுத்த மாதம் பிரபல பெண்ணிய சமூக ஆர்வலர், திருப்தி தேசாய், 100 பெண்களுடன் சபரிமலை கோவிலுக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, மஹாராஷ்டிர மாநிலம், சனி சிங்னாபூர், ஹாஜி அலி தர்கா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், பெண்களை அனுமதிக்கக் கோரி, தேசாய் தலைமையில், பல போராட்டங்கள் நடந்துள்ளன.
மாற்ற முடியாது:
இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து, கேரள அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரிய நடைமுறைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எதற்காகவும் கோவில் பழக்க வழக்கங்களையும், நடைமுறையையும் மாற்ற முடியாது. சபரிமலை கோவிலில், பெண்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
English summary:
Sabarimala: Sabarimala temple in Kerala state established that women be allowed to be permitted.