சசிகலா குடும்பத்தில், தற்போது, டி.டி.வி., தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவ தால், மற்ற உறவினர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயலலிதா மறைந்ததும், அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை சுற்றி, சசிகலாவின் உறவினர்கள் நின்றனர். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, வீட்டை விட்டு துரத்தி அடிக்கப் பட்ட, சசிகலா உறவினர்கள், உடலை சுற்றி நின்றது, அ.தி.மு.க.,வினரிடையே கடும் அதிர்ச்சியையும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து, உறவினர்களை 'கொஞ்ச நாட்கள் போயஸ் கார்டன் வர வேண்டாம்' என, சசிகலா உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, சசிகலா உடனிருப்பது யார் என்பதில், சசிகலா குடும்பத்தினர் இடையே, மோதல் உருவானது. குறிப்பாக, சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், சகோதரி மகன், டி.டி.வி., தினகரனுக்கும் இடையே, அதிகாரப்போட்டி ஏற்பட்டது.இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதற்கான தீர்மான நகலை, போயஸ் கார்டனில், சசிகலாவிடம், முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். அப்போது, சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் இருந்தனர். இதன் மூலம், அவர்களுக்கு, சசிகலா முக்கியத்துவம் அளிப்பது உறுதியாகி உள்ளது. இது, சசிகலா வின் மற்ற உறவினர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய ராஜகுரு தினகரன்:
ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியை வழி நடத்தும் பொறுப்பை, தன்னிச்சையாகவே எடுத்துக் கொண்டார் சசிகலா. இது கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்சியினரை சமாளிக்க டி.டி.வி.தினகரன் போன்ற ஒருவரை பயன்படுத்திக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என நடராஜன் நினைத்தார். ஏற்கனவே அரசியல் அனுபவம் சிறிது இருப்பதால், அவரை களத்தில் இறக்கி விட்டு, கட்சியினரை சமாளிக்க முயற்சி எடுக்கப்பட்டது.
தினகரனின் பணி:
இதையடுத்து தான், கட்சி நிர்வாகத்தில் இருந்து பல ஆண்டுகளாக முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தினகரனை அழைத்து, கூட வைத்துக் கொண்டார் சசிகலா. நான் எந்த சிக்கலும் இல்லாமல் பொதுச் செயலர் ஆக வேண்டும். அதற்கு உன்னால் தான் உதவிட முடியும் என்று சொல்ல, பத்து நாட்களுக்கு முன்னால், தீவிர அரசியலில் களம் இறங்கினார் தினகரன்.தினமும் அதிகாலையிலேயே போயஸ் தோட்டம் வரத் துவங்கினார். அதிரடியாக பேசிப் பழக்கம் இல்லாத தினகரன், கட்சியில் சசிகலாவுக்கு யார் யார் எல்லாம் எதிர்ப்பாக இருக்கின்றனர் என்ற பட்டியல் எடுத்தார். அந்த தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டார். மெலிதான தன்னுடைய குரலில் பேசத் துவங்கினார்.
உருக்கமாக பேசி...:
செங்கோட்டையனில் துவங்கி, கே.பி.முனுசாமி வரை, சசிகலாவின் எதிர்ப்பு முகாமில் இருந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசினார். கடந்த கால கசப்புகள் இனி ஒரு நாளும் நடக்காது. அதற்கு நான் கியாரண்டி. ஏற்கனவே எனக்கு இருந்த சில நெருடல்களும் முழுவதுமாக நீங்கி விட்டன. சசிகலா, கட்சியின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஆட்சி மற்றும் கட்சியில், என்னைப் போன்றவர்களுக்கு கட்டாயம் முக்கியத்துவம் இருக்கும். அப்படி இருக்குபோது, உங்கள் பிரதிநிதியாக இருந்து, நான் உங்களுக்கு உதவிடுவதைத் தவிர, வேறு யாருக்கு உதவிடப் போகிறேன்?ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்த வரையில், முதல் நபராக இருந்து செயல்படும் முதல்வர் பன்னீர்செல்வம், என்னால் கட்சியில் அடையாளப்படுத்தப்பட்டவர்தான். அவர் ஒருநாளும் நான் வைக்கும் வேண்டுகோளை மீறி செயல்பட மாட்டார். அவருக்கு என் மீது அப்படியொரு அன்பும்; பற்றுதலும் உண்டு என்று உருக்கமாகப் பேச, எதிர்ப்பாளர்களை சாய்த்தார். சசிகலாவுக்கு எதிர்ப்பாக செயல்பட்ட தலைகள் எல்லாம், திடீரென டிராக் மாறி, சரண்டர் ஆனதன் பின்னணி இதுதான் என, அ.தி.மு.க., வட்டாரங்களிலே பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.
டிச. 29ல், வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., பொதுக்குழு என முடிவு செய்தது வரை, தினகரன் ஆலோசனைபடிதான் நடந்ததாக சொல்கிறது போயஸ் வட்டாரம்.
English Summary:
Sasikala family, present, D.D.V given the importance of the New York Times, and other relatives are dissatisfied.