சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசில், பியூன் வேலைக்காக சுதந்திர போராட்ட வீரர் உத்தம் சிங்கின் கொள்ளுப்பேரன் போராடி வருகிறார்.
உறுதிமொழி:
கடந்த 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலா பாக்கில் கூடிய அப்பாவி மக்களை ஜெனரல் ஓ டியர் சுட்டுக்கொன்றார். இதற்கு பழிவாங்கும் வகையில், 21 வருடங்களுக்கு பின் லண்டனில் டயரை, உதம் சிங் சுட்டுக்கொன்றார். அவரது மூத்த சகோதரி வழி கொள்ளுப்பேரனான ஜக்கா சிங், தற்போது பஞ்சாபில் வசித்து வருகிறார். 6 பேர் கொண்ட குடும்பத்தில் வசிக்கும் அவரது தந்தை தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். ஜக்கா சிங், துணிக்கடையில் மாதம் ரூ.2,500 சம்பளத்திற்கு பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2006ம் ஆண்டு அரசுப்பணி வழங்குவதாக முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் உறுதியளித்தார். ஆனால் ஆட்சி மாறியது. இருப்பினும், 10 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அவருக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை.
அலைச்சல்:
இது தொடர்பாக ஜக்கா சிங் கூறியதாவது: கடந்த 2006ல் அரசு பணி வழங்வகுதாக முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் கூறினார். இதனை வாங்குவதற்காக பல முறை முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பல முறை, தற்போதைய மாநில நிதியமைச்சரை சந்தித்து பேசியுள்ளாம். இதனால், ஒரு முறை, எங்களது கோரிக்கை முதல்வர் அலுவலகத்தில் உள்ளதாக கூறினார். பின்னர், காங்கிரஸ் அளித்த வாக்குறுதி என்பதால், எங்களால் ஒன்றும் செய்ய இயலாது எனக்கூறி விட்டார். அம்ரீந்தர் சிங் வாக்குறுதியை தொடர்ந்து துணை கலெக்டர் எனது தந்தையை சந்தித்து பேசினார். எந்த பணியாக இருந்தாலும் வழங்குவதாக கூறினார். ஆனால், பியூன் வேலை கூட இதுவரை கிடைக்கவில்லை என்றார்.
English summary:
Chandigarh: The Punjab state government, peon freedom fighter Udham Singh's grandson had been battling for the job.