திருப்பதி : ''நோபல் பரிசு பெறும், ஆந்திர விஞ்ஞானிகளுக்கு, 100 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.
இந்திய அறிவியல் மாநாடு:
ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இங்குள்ள திருப்பதியில், இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் துவக்கி வைத்தார். ஐந்து நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட, உலக நாடுகளைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.
மெகா பரிசு:
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்த, முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ''நோபல் பரிசு பெறும், வருங்கால ஆந்திர விஞ்ஞானிகளுக்கு, 100 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்,'' என்றார். வழக்கமாக, நோபல் பரிசுடன், 5.96 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். அதைவிட பல மடங்கு அதிகமான தொகையை, சந்திரபாபு நாயுடு பரிசாக அறிவித்துள்ளார்.
English summary:
Tirupati: '' will receive the Nobel Prize, AP scientists, prize as 100 crore, '' as the state chief minister and Telugu state Party leader Chandrababu Naidu has announced.