லக்னோ - எனது தந்தையும் சமாஜ் வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் எனது பயணத்தில் தொடர்ந்து வருவார். அவருடனான உறவை யாரும் உடைக்க முடியாது என கட்சியின் சைக்கிள் சின்னத்தை வென்ற பின்னர் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது முலாயம் சிங்கின் சமாஜ் வாடி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அம் மாநில முதல்வராக முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உள்ளார். அவருக்கும் முலாயம் சிங் யாதவின் தம்பியும் கட்சியின் மாநில தலைவருமான சிவ்பால் யாதவுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கட்சி இரு அணிகளாக உடைந்தது. இதனால் கட்சியின் சைக்கிள் சின்னத்தை தேர்தல் நேரத்தில் கைப்பற்ற இரு அணியினரும் போராடினார்கள். இதில் அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் அளித்தது.
சைக்கிள் சின்னத்தை பெற்ற பின்னர் , அகிலேஷ் யாதவ் நேற்று கூறியதாவது, முலாயம் சிங்கை என்னுடன் அழைத்து செல்வேன். அவருடனான உறவை யாரும் முறிக்க முடியாது. சைக்கிள் சின்னத்தை பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அதன் படியே தற்போது சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சைக்கிள் சின்னம் தனது அணிக்கும் கிடைத்ததும், அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாயம் சிங்கை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் ட்விட்டரில் விடுத்த செய்தியில், சைக்கிள் ஓடும். அதன் பயணம் முன்னோக்கி செல்லும் என குறிப்பிட்டு இருந்தார். சைக்கிள் சின்னம் பறி போன நிலையில் தனது தம்பி சிவ்பால் யாதவையும் அம்பிகா சவுத்ரியையும் முலாயம் சிங் யாதவ் சந்தித்து பேசினார்.
English Summary:
Lucknow - My father and founder of the Mulayam Singh Samaj Wadi party will continue on my journey. No one can break up with him after he won the party's Uttar Pradesh state Chief Minister Akhilesh Yadav said the bicycle icon. In Uttar Pradesh, Mulayam Singh's currently happening Samaj Wadi party rule.