Saturday, 18 February 2017
வாகன சோதனைக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். அப்போது சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலின் கார் சோதனை செய்யப்பட்டதற்கு தி.மு.க., உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‛கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்...' என, கோஷம் எழுப்பியவாறு சட்டசபைக்குள் சென்றனர்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு ஓபிஎஸ்.,க்கே சாதகம் : பாண்டியராஜன் நம்பிக்கை
சென்னை : இன்று சட்டசபையில் நடக்கப் போகும் நம்பிக்கை ஓட்டெடுப்பு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே ஆதரவாக இருக்கும் என மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் பலர் தங்கள் அணிக்கு ஆதரவாக ஓட்டளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் செய்தியாளர்களிடம் பே
சிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பலத்த பாதுகாப்பு
சென்னை : தமிழக சட்டசபையில் இன்று, முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இதனையடுத்து சட்டசபையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபையின் 10 வாசல்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை வளாகத்திற்குள் செல்ல செய்தியாளர்களின் வாகனங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன. எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட உள்ளன. எம்.எல்.ஏ.,க்கள் செல்ல தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கும் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கை ஓட்டெடுப்பு: கூவத்தூரில் இருந்து புறப்பட்டனர் எம்.எல்.ஏ.,க்கள்
சென்னை : புதிதாக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,18) நடக்கிறது. காலை 11 மணிக்கு நடக்கும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்வதற்காக, கடந்த 10 நாட்களாக கூவத்தூர் ‛கோல்டன் பே' ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.,க்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கூவத்தூரில் இருந்து முதலில் அமைச்சர்கள் புறப்பட்டனர். பின்னர் எம்.எல்.ஏ.,க்கள் காரில் புறப்பட்டனர். ஒவ்வொரு காரிலும் 5 எம்.எல்.ஏ.,க்கள் செல்கின்றனர். கார்களில் செல்லும் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர்
சசி அணியிலிருந்து கோவை எம்.எல்.ஏ., அருண்குமார் வெளியேறினார்
சென்னை : கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்குமார் கூவத்தூரிலிருந்து வெளியேறினார். நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கூவத்தூரிலிருந்து தப்பி ஓட்டம்:
சசிகலா ஆதரவு அணியிலிருந்த கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்குமார் கூவத்தூரிலிருந்து வெளியேறினார். இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பாததால் ஓட்டெடுப்பை புறக்கணித்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
கட்சிப்பதவி ராஜினாமா:
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: அதிமுக.,வின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை. எனவே இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பவில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணித்து சொந்த ஊர் செல்கிறேன். கோவை மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். பணம், பதவி முக்கியமல்ல. கொள்கை தான் முக்கியம். மக்கள், தொண்டர்கள் கருத்தை அறிந்து முடிவு எடுத்துள்ளேன். குடம்ப ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீண்டு இடைப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்த வேண்டும். அதிமுக.,விற்குள் ஒரு குடும்பத்தை புகுத்துவதை எதிர்த்தே இந்த முடிவை எடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். விரைவில் அவர் பன்னீர் செல்வத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தது பலம்:
மேலும் ஒரு எம்.எல்.ஏ., வெளியேறியதை தொடர்ந்து இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதவான எம்.எல்.ஏ.,க்கள் பலம் 122ஆக குறைந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை ஓட்டெடுப்பு: சட்டசபைக்குள் நுழைய இன்று கடும் கட்டுப்பாடு
சென்னை: சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறுவதை முன்னிட்டு, சட்டசபைக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு:
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி, இன்று சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்; இதற்காக, நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று(பிப்., 18) நடத்தப்படுகிறது. காலை, 11:00 மணிக்கு கூடும் சட்டசபையில், புதிய அமைச்சரவை மீது, நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுக்கப்படும். ஓட்டெடுப்பின் போது பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது என்பதால், கோட்டையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சட்டசபையில் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மொபைலுக்கு தடை:
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டசபை அலுவலர்கள் மட்டுமே சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அமைச்சர்களின் உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி, பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி கிடையாது. மொபைல் போன், எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.