
Tuesday, 21 February 2017
இன்று முதல் சமூக வலைதளங்களில் பிரசாரம்: பாண்டியராஜன்

இன்று முதல் வாரத்திற்கு ரூ.50,000 எடுக்கலாம்
புதுடில்லி : வங்கி சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி மேலும் தளர்த்தியது. வாரத்திற்கு ரூ.50,000 வரை எடுக்கலாம் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பிப்ரவரி 8 ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.50,000 ஆக உயர்த்தப்படும். மார்ச் 13 ம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படும் என கூறி இருந்தது. இதனையடுத்து இன்று முதல் வங்கிகளில் வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம்.
பிப்ரவரி 8 ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.50,000 ஆக உயர்த்தப்படும். மார்ச் 13 ம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படும் என கூறி இருந்தது. இதனையடுத்து இன்று முதல் வங்கிகளில் வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம்.
ஊழலை எளிமையாக்கிய ரூபாய் நோட்டு வாபஸ் : ராம்தேவ் தாக்கு

- ரூ.2000 தேவையா? :
போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், ஊழலுக்கு எதிரான பிரசாரத்திற்காக பா.ஜ., அரசை நான் ஆதரித்தேன். சில நல்ல பணிகளை ஆதரிக்கும்படி காங்., என்னிடம் கேட்டிருந்தால் கூட, அவர்களுக்கு நான் ஆதரவு அளித்திருப்பேன். ரூ.2000 நோட்டு கொண்டு வந்தது நல்ல விஷயமல்ல. பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதும், ரூ.2000 நோட்டு கொண்டு வரப்பட்டதும் குற்றங்களை உருவாக்கும் மையம். ஊழலை எளிமையாக்கி உள்ளது.
மறுபரிசீலனை செய்யனும் :
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை போதை விற்பனையாளர்கள், பயங்கரவாதிகள், நக்சலைட்கள் தான் பயன்படுத்துகிறார்கள். ரூபாய் நோட்டை பிரதமர் எதற்காக வாபஸ் பெற்றார் என தெரியவில்லை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவது எந்த நாட்டின் பொருளாதாரத்திற்குள் நல்லதல்ல. இதனால் ரூ.2000 நோட்டுக்கள் கொண்டு வந்துள்ள முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இன்னும் நம்புகிறேன் :
வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்பேன், ஊழலை ஒழிப்பேன் என மோடி கூறியதால் தான் 2014 லோக்சபா தேர்தலின் போது அவருக்கு ஆதரவு அளித்தேன். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு ஆகியும் எதுவும் நடக்கவில்லை. மீதம் இருக்கும் 2 ஆண்டுகளிலாவது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். இப்போதும் அவரை நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்

பதி அபய் மனோகர் சப்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை நிகழ்வு : கவர்னரிடம் அறிக்கை தாக்கல்

அறிக்கை தாக்கல் :
இதனையடுத்து சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கவர்னர், சட்டசபை செயலாளருக்கு உத்தரவிட்டார். இது குறித்து இன்று காலை தலைமை செயலகத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் குறித்த அறிக்கையை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன், கவர்னர் மாளிகையில் நேரில் அளித்தார். சட்டசபை நிகழ்வுகள் குறித்த வீடியோவும் கவர்னர் மாளிகையில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கவர்னர் மும்பை சென்றுள்ளதால், அறிக்கை அளிக்கப்பட்டது தொடர்பாக கவர்னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்

ஹிட்லர் தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக பயன்படுத்தி வந்த தொலைபேசி மூலம் தான் கடைசி 2 ஆண்டுகள் பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். முதலில் கறுப்பு நிறத்தில் இருந்த இந்த தொலைபேசிக்கு, பின்னர் செங்கல் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் பெயர் பொறிக்கப்பட்ட இந்த தொலைபேசி, ஹிட்லரின் மரணத்திற்கு பிறகு, 1945ம் ஆண்டு பதுங்கு குழி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த தொலைபேசி 243,000 அமெரிக்க டாலருக்கு (ரூ.1,62,72,495) ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தொலைபேசியில் ஸ்வஸ்திக் மற்றும் கழுகு சின்னம் அச்சிடப்பட்டுள்ளது. தொலைபேசி மட்டுமின்றி, ஹிட்லர் பயன்படுத்திய 1000 பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
நடராஜன் மீதான வெளிநாட்டு கார் இறக்குமதி முறைகேடு வழக்கு: பிப்.27 ல் இறுதி விசாரணை

இரண்டு ஆண்டு சிறை தண்டனை :
இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. தொழில் அதிபர் பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். அதனால், நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நான்கு பேருக்கும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2010ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்டனையை நிறுத்தி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, கார் இறக்குமதி தொடர்பாக, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மத்திய அமலாக்க துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, நடராஜன் உள்ளிட்ட, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 2016 டிச.., 22ல் உத்தரவிட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்.27 ல் துவங்குகிறது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.