புதுக்கோட்டை: வடகாடு, நல்லாண்டார்கொல்லை போராட்டக்குழுவினரிடம் ஹை ட்ரோ -கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்ற உத்தரவாத படிவத்தை அளித்தார் மாவட்ட கலெக்டர் கணேஷ். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். வடகாட்டில் எண்ணெய் கிணற்றை அகற்ற தயாராக உள்ளோம் என மாவட்ட கலெக்டர் கணேஷ் உறுதி அளித்தார்.
Tuesday, 28 March 2017
விவசாயிகள் போராட்டம்: தமிழக அரசு ஏற்பாடு
புதுடில்லி: வறட்சி நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 14 நாட்களாக தொடர் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை மறுநாள் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளனர்.
உள்ளூர் விமானபோக்குவரத்தில் இந்தியா மூன்றாமிடம்
டில்லி: உள்ளூர் விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா மூன்றாமிடம் பெற்றுள்ளது.
உள்ளூர் விமானச்சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் உலகளவில் இந்தியா 3ம் இடம் பெற்றுள்ளது. ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் வௌியிட்டுள்ள பட்டியலில் 2016ம் ஆண்டுக்கான சந்தையில் இந்தியா 100 மில்லியன் பயணிகளுடன் 3ம் இடமும், சீனா 490 மில்லியன் பயணிகளுடன் 2ம் இடமும், அமெரிக்கா 815 மில்லியன் பயணிகளுடன் முதலிடமும் பெற்றுள்ளது. ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3ம் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் தீ விபத்து: குடிசை வீடுகள் எரிந்து நாசம்
ஸ்ரீநகர்:காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சினார் பக்கில் சூன்டேகுல் குடிசை பகுதியில் நேற்று(மார்ச்-27) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீயை அணைப்பதற்காக போராடிய இரு வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.காற்று வேகமாக வீசியதால் பல குடிசைகள் உள்பட சில பெரிய வீடுகளும் எரிந்து சாம்பலாயின. விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.