புதுடில்லி: மனநலம் பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்றால், அது குற்றமாகாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, மனநலம் பாதிக்கப்பட்டோர் நலனுக்கான, மனநல மருத்துவ மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேறியது. இந்த மசோதா, 134 திருத்தங்களுடன், ராஜ்யசபாவில், 2016, அக்டோபரில் நிறைவேறியது. இந்த மசோதாவின்படி, மனநலம் பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்றால், அது குற்றமாக கருதப்படாது. மேலும், இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது உரிமையாக்கப்படுகிறது.
Tuesday, 28 March 2017
தினகரன் மீது புகார் அளிக்க முடிவு: மைத்ரேயன்
சென்னை: பணப்பட்டுவாடா தொடர்பாக தினகரன் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பன்னீர் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
பணப்பட்டுவாடா:
இதுதொடர்பாக பன்னீர் அணியை சேர்ந்த மைத்ரேயன் தெரிவிக்கையில், ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மூலம் டி.டி.வி.தினகரன் பணப்பட்டுவாடா செய்கிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். டில்லியில் இன்று (மார்ச்,28) மதியம் 12 மணி அளவில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தல்:
ஏப்ரல் 12 ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சசிகலா அணியிலிருந்து, அ.தி.மு.க., அம்மா கட்சி சார்பில் டி.டி.வி.தினகரனும், பன்னீர் அணியிலிருந்து அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தேர்தல் அறிக்கை
ஆர்.கே.நகர்: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
வாக்குறுதிகள்:
மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். கொருக்குப்பேட்டையில் புதிதாக சுரங்க வழிப்பாதை ஏற்படுத்தி தரப்படும், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு இலவச தையல் மிஷின்கள் வழங்கப்படும். மீனவர்களுக்கு மானிய விலையில் படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்படும். தண்டையார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது

மோகன் பாகவத்தை ஜனாதிபதி ஆக்க சிவசேனா விருப்பம்
புதுடில்லி:ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என சிவசேனா கூறிஉள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017- ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ., சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் குறித்து வியூகம் வகுப்பதில் பா.ஜ., மும்மரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கையில் பிரதமர் மோடி இறங்கி உள்ளார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மோடி அடுத்த வாரம் டில்லியில் இரவு விருந்து அளிக்கிறார்.
உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு:
இவ்விருந்தில், கலந்து கொள்ளுமாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்று உத்தவ் தாக்கரே, இந்த விருந்தில் பங்கேற்பார் என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது.

2017-ல் குறைவாகவே தென்மேற்கு பருவ மழை பெய்யும் - ஸ்கைமெட் தகவல்
புதுடில்லி: 2017ல் தென்மேற்கு பருவமழை, தென்னிந்தியாவில் சராசரிக்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று தனியார் வானிலை அறிவிப்பு மையம் ஸ்கைமெட் அறிக்கை விடுத்துள்ளது.
விவசாயம் பாதிப்பு:
கடந்த ஆண்டு (2016) நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 1951 முதல் 2000 வரையிலான இடைப்பட்ட வருடங்களில் நாட்டில் சராசரி தென்மேற்கு மழை 89 செ.மீ., ஆக இருந்தது. இந்தாண்டு (2017) நாட்டின் தென்மாநிலங்களில் 89 செ.மீ,., க்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று ஸ்கைமெட் அறிவித்துள்ளது.
வடமாநிலங்களில் நல்ல மழை:
தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்றவற்றில் இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில், நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது, இவவாறு ஸ்கைமெட் தனியார் வானிலை அறிவிப்பு மையம் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
March 28, 2017bi-election, chennai, election commission of india, instruction, R.K.nagar, tamil nadu
சென்னை:ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவுறுத்தி உள்ளார். வாக்காளர்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது. தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டவர் தகுதி உடையவராக இருத்தல் வேண்டும். முறைகேடுகளை தேர்தல் அலுவலரிடமே தெரிவிக்க வேண்டும். தேர்தல் அலுவலர் நடத்தும் கூட்டங்களில் வேட்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுக்க கூடாது. தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களில் வேட்பாளர்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய தவறக்கூடாது. வேட்பாளர்கள் பெயர், சின்னம் குறித்த பூத் சிலிப் கட்சியினர் வழங்க கூடாது. இவ்வாறு வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவுறுத்தி உள்ளார்.
150 மணி நேரத்தில் 50 முடிவுகள்: உ.பி., முதல்வரின் அதிரடி
லக்னோ:உ.பி. முதல்வராக பதவியேற்ற பின்னர் 150 மணி நேரத்திற்குள் ஒரு அமைச்சரவை கூட்டம் கூட இல்லாமல் யோகி ஆதித்யாநாத் 50 அதிரடி முடிவுகளை எடுத்து உள்ளார்.
அதிரடி முடிவுகள்:
சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி கூடங்களுக்கு தடை விதிப்பு, மக்கள் அதிகமாக கூடும் சந்தை இடங்களில் சுகாதார நிலை குறித்து சோதனை, பெண்களுக்கு எந்தஒரு தொல்லையும் ஏற்பட்டுவிடாத வண்ணம் போலீஸ் கண்காணிப்பு, அலுவலங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பான் மசாலா பயன்படுத்த கூடாது. அனைத்து துறைகளும் மாதம் தோறும் அறிக்கை தாக்கல் செய்தல் வேண்டும். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் பள்ளிகளில் டீசர்ட் அணிய கூடாது. பள்ளியில் தேவையில்லாமல் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது. அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு.அரசு அலுவலகம் தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட 50 முடிவுகளை எடுத்து உள்ளார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு:
மாநிலத்தில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இல்லை என்பதை ஜூன் 15ம் தேதிக்குள் பொதுத்துறை உறுதிசெய்ய வேண்டும். கிரிமினல் பின்னணி கொண்ட ஒப்பந்ததார்களை அதிகாரிகள் உடனடியாக மாற்ற வேண்டும். மாநிலத்தில் அரசு அதிகாரிகள் அலுவலக ஆவணங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என அமைச்சர்கள் அறிவுரை வழங்கவேண்டும்.
மாநிலம் முழுவதும் பெண் போலீஸ் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பு அறையில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் போலீஸ் இருக்க வேண்டும். உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த, விழா காலங்களில் தடையில்லா மின்சார உறுதி. இவ்வாறு அதிகாரிகளுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.