Monday, 24 April 2017
பிரிட்டனை விட்டு வெளியேறும் இந்தியர்கள்
லண்டன்: பிரிட்டனில் தங்கி இருந்த இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கிருந்து வெளியேறுவது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டு வேலை என்றால், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியர்களுக்கு சொர்க்கபூமியாக இருப்பது பிரிட்டன் தான். ஆனால், சமீபகாலமாக, சட்டவிரோதமாக அங்கு குடியேறிய இந்தியர்கள், விசா காலம் முடிந்த பிறகு பல ஆண்டுகளாக அங்கு தங்கி இருக்கும் இந்தியர்கள், இனிமேல் அங்கு காலம் தள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்து, தானாகவே அங்கிருந்து சொந்த நாட்டுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். கடந்த, 2016ம் ஆண்டில், 5,365 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அந்த ஆண்டில் அங்கிருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கையில், இது, 22 சதவீதமாகும்.
இதற்கு மேல் அங்கு தங்கினால், வேலை கிடைக்காது, வங்கி கணக்கு துவக்க முடியாது, டிரைவிங் லைசென்ஸ் கிடைக்காத நிலை உள்ளிட்ட பல சேவை வசதிகள் கிடைக்காது என்பதால் தான் இந்தியர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என, இந்தியர்கள் அதிகம் வசிக்கும், இயாலிங் சவுதால் என்ற தொகுதியின் தொழிலாளர் கட்சி எம்.பி., வீரேந்திர சர்மா கூறினார்.
English summary:
London: The number of Indians staying in Britain has set a new turn.

மும்பையில் பெட்ரோல் விலை அதிகம்
மும்பை: நாட்டிலேயே மும்பைவாசிகள் தான் பெட்ரோலை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
வரி உயர்வு:
நாடு முழுதும், பெட்ரோல் விலை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் வாட் வரி உள்ளிட்ட சில வரி விதிக்கப்படுகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு வாட் வரியுடன் இணைந்து வசூலிக்கும் வறட்சி வரியை ரூ.3 ஆக உயர்த்தியுள்ளது. இதனால், மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.45 ஆகவும், நாக்பூரில் ரூ.77.14 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.26 ஆக உள்ளது. கடந்த வருடம் வறட்சி இல்லாத போது, இந்த வறட்சி வரியை மாநில அரசு ரூ. 6 லிருந்து ரூ.9 ஆக உயர்த்தியது.
வேறெங்கும் இல்லை:
தற்போது வரியை உயர்த்தியுள்ளதன் மூலம், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடுவதினால் ஏற்படும் இழப்பை சரி செய்ய முடியும் என பெயர் வெளியி விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
பெட்ரோல் விற்பனை டீலர் ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வருடத்தில் வரி யுடன் சேர்த்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7 முதல் 8 வரை உயர்ந்துள்ளது. வறட்சி வரி மற்ற மாநிலங்களில் வசூல் செய்யப்படுவதில்லை. இந்த வரியை அரசு விலக்கி கொண்டால், மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் விலை இங்கு குறைவாக இருக்கும் என்றார்.
கடந்த ஏப்ரல் 1 ல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.77 எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தபோது, அதன் பலனை மக்களுக்கு மாநில அரசு கொடுக்கவில்லை. டீலர்கள் கமிஷன் உயர்த்தி தரக்கோரி போராட்டம் நடத்துகின்றனர். இது ஏற்கப்பட்டால், விலை இன்னும் அதிகரிக்கும் என பொது மக்கள் ஒருவர் கவலையுடன் கூறினார்.
English summary:
MUMBAI: Mumbai Indians have bought petrol at a higher price.

ரயில்கள் பற்றி தகவல் அறிய மெகா ஆப்
புதுடில்லி: ரயில் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் புதிய மெகா ஆப்பை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. இந்த புதிய ஆப் வசதி, ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஆப் வசதியின் பெயர், 'ஹிந்த்ரயில்' என, இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏராளமான ஆப் வசதிகள்:
ரயில்கள் இயக்கம் தொடர்பாக தகவல் அறிய தற்போது ஏராளமான ஆப் வசதிகள் உள்ளன. சி.எம்.எஸ்., ஆப் எனப்படும் புகார் நிர்வாக சிஸ்டம் ஆப் வசதி; தேவைப்படும் தகவல்கள தரும் தேசிய ரயில் விசாரணை சிஸ்டம் எனப்படம் என்.டி.இ.எஸ்., ஆப் வசதி; முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவு வசதி இல்லாத டிக்கெட் பெறுவதற்கான ஆப் வசதி; இணைய தளம் மூலம் உணவுக்கு முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி., ஆப் வசதி என பல ஆப் வசதிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மெகா ஆப் வசதியை தான் ரயில்வே துறை தற்போது உருவாக்கி வருகிறது. இந்த ஆப் வசதிக்கு, ' மெரிரயில், இரயில், மைரயில், ரயில் அனுபூதி' என, பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர்( போக்குவரத்து) முகமது ஜம்ஷெத் கூறியதாவது:
ரயில்கள் தாமதமாகும் போது, சரியான தகவல்களை பெறுவதில் சிக்கல் இருப்பது உண்மை தான். இப்பிரச்னையை தீர்க்க தான் புதிய மெகா ஆப் வசதி உருவாக்கப்படுகிறது. ஜூன் மாதம் முதல் இது செயல்பாட்டுக்கு வரும். ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், தாமதம், ரத்து அறவிப்பு, பிளாட்பாரம் எண், ரயில் எத்தனை மணி நேரம் இயக்கப்படும், படுக்கை வசதி இருக்கிறதா, டாக்சி புக்கிங், போர்டர் வசதிக்கு உதவுவது, ஓய்வு அறை, ஓட்டம், சுற்றுலா வசதி, இணைய தளம் மூலம் உணவுக்கு ஆர்டர் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், உதவிகளையும் இந்த ஆப் வசதி மூலம் பெற முடியும். இந்த புதிய ஆப் வசதிக்கு,'ஹிந்த்ரயில்' என, பெயரிடப்படலாம். ஆனால், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
New Delhi: The Railways has created a new mega supermarket to respond to all the doubts of the train. The new App facility comes in from June. It is reported that the name of this facility is 'Hindhirai'.

3வது நாளாக இன்றும் தினகரன் ஆஜராக உத்தரவு
புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்துள்ள புகாரில், தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று 2 வது நாளாக விசாரணை நடத்தினர் .சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்த நிலையில் இன்று (24ம்தேதி) மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டப்பட்டுள்ளது.
போன் அழைப்புகள் ஆய்வு:
சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
ஒரே வரியில் பதில்:
தினகரன், தரகர் சுகேஷ் சந்திரா, நண்பர் மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகிய நால்வரிடமும் விசாரணை நடக்கிறது. விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் ஆஜராக உத்தரவு:
சுமார் 10 மணி நேரம் தொடர்ந்த விசாரணை நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைந்தது. விசாரணைக்கு பின்னர் இன்று (24ம்தேதி) மாலை 4 மணிக்கு மீண்டும் தினகரன் ஆஜராக வேண்டும் என டில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகியோர் மதியம் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தவிடப்பட்டுள்ளது. இரவு 1.30 மணியளவில் தினகரன் விசாரணை முடிந்து புறப்பட்டார்.
English summary:
NEW DELHI: The Delhi Criminal Court today ordered prosecution for bin Laden's bribe to get a bribe to get a double leaf symbol. The investigating agency has been ordered to appear for the second day at 4 pm on Tuesday (24th May).

இரு அணிகள் இணைந்தால் நல்லாட்சி: நட்ராஜ் எம்.எல்.ஏ.,
சென்னை: கிண்டியில் மைலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் அளித்த பேட்டி: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதிமுகவின் உட்கட்சி பிரச்னைக்கு பா.ஜ., காரணமல்ல. இரண்டு அணிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. தனிப்பட்ட கருத்துகளை கூறாமல் இரு அணிகளும் பேச்சு நடத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரு அணிகளும் இணைந்தால் தான் நல்லாட்சி நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: Mylapore MLA in Kindi, Natraj's interview: Both teams of the High Command have to work together. The BJP is not responsible for the internal party's internal problem.
காஷ்மீர் போட்டோகிராபரின் மனிதாபிமானம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில், கல்வீச்சில் காயமடைந்த மாணவியை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டாமல், அவரை காபாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போட்டோகிராபரை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.
சிரியாவில் நடந்த சம்பவம்:
கலவர பகுதியில், வன்முறை நடக்கும் பகுதியில், போர்கள பகுதியில் எடுக்கப்படும் படங்கள் உலகளவில் பேசப்படும். ஆனால், கடந்த வாரம் சிரியாவில் பஸ்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, படுகாயம் அடைந்த குழந்தைகளை காப்பாற்ற அப்த் அல்காதர் ஹபாக் என்ற போராட்டோகிராபர் காப்பாற்ற முயற்சி எடுத்தது உலகளவில் பெரும் பாராட்டை பெற்றது. இதே போன்ற ஒரு சம்பவம், சில நாட்களுக்கு முன் காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நடந்துள்ளது.
ஸ்ரீநகரின் நவாக்தால் பகுதியில் கடந்த வியாழக்கிழமை உயர்நிலைப்பள்ளி மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் அவர்களை தவிர அந்த இடத்தில், சொற்ப எண்ணிக்கையில் போலீசாரும், பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் இருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கல், குஷ்பூ ஜன் என்ற மாணவியை தாக்கி அவரது மண்டையை பிளந்தது. ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்த குஷ்பு ஜன்னை கண்டு மற்ற மாணவியர் அலறினர். அந்த பகுதியே திடீரென பதட்டமானது. அப்போது அசோசியேடட் பிரஸ் என்ற வெளிநாட்டு பத்திரிகை ஏஜன்சியின் போட்டோகிராபர் தர் யாசின் என்பவர் தன்னிடம் இருந்த கேமராவை தூக்கி எறிந்து விட்டு, காயமடைந்த மாணவியை இரு கைகளிலும் ஏந்தியபடி மருத்துவமனையை நோக்கி ஓடினார். மற்ற மாணவியரும் கதறி அழுதபடி அவரை பின் தொடர்ந்து ஓடினர்.
வழியில் வந்த காரை நிறுத்தி, காயமடைந்த மாணவியை அதில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். சரியான நேரத்தில் அழைத்து செல்லப்பட்டதால், தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த மாணவி உயிர் பிழைத்தார்.
போட்டோகிராபர் தர் யாசின், காயமடைந்த மாணவியை கைகளில் சுமந்து செல்லும் காட்சியை உள்ளூர் போராட்டோகிராபர் ஒருவர் படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இணையத்தில் இந்த படம் வைரலாக பரவி வருகிறது. போட்டோகிராபர் தர் யாசினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மாணவியர் மீது கற்களை வீசியது விஷமிகளும், மாணவர்களும் தான் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை உள்ளூர் மக்கள் மறுத்துள்ளனர்.
English summary:
Srinagar: Srinagar, in Srinagar, has not been interested in catching a picture of a wounded girl who has been praising the photographer for trying to save him.