டக்சன் பிரைம் என்ற தெருநாயை தத்தெடுத்து, தனது ஷோரூமில் சேல்ஸ்மேன் ஆக்கியுள்ளது பிரேசிலுள்ள ஹூண்டாய் கார் ஷோரூம். இந்த நாயின்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஷோரூமிற்குள் நுழைந்தவுடன் உங்களை வரவேற்பது இந்த ஆண்டின் சிறந்த ஊழியர் விருதுபெற்ற நாய் என்றால் நீங்கள் அக்காட்சியை கற்பனை செய்து பாருங்கள். ஷோரூமிற்கு அருகில்தான் இந்த தெருநாய் வசித்து வந்துள்ளது, அதன்பிறகு இந்த நிறுவனத்தின் ஊழியர்களுடன் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளது டக்சன். பிறகு மெல்ல மெல்ல ஷோரூமிற்குள் நுழைய ஆரம்பித்து நன்கு பழகவும் ஆரம்பித்துள்ளது இந்நாய். இதனால் இந்த நாயை ஷோரூமின் சிறப்புமிக்க ஊழியர் ஆக்கினார்கள், மேலும் அந்த நாய்க்கு தனி அடையாள அட்டையையும் நிறுவனம் வழங்கியது. இப்போது டக்சன் சிறப்பாக வாடிக்கையாளர்களை வரவேற்று வருகிறது. மேலும் இந்த நாய் மீட்டிங்களில் கலந்துகொள்வது, கடினமாக உழைப்பது,வாடிக்கையாளர்களை வரவேற்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டக்சன் பிரைமின் கதை இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட பிறகு பல்லாயிரம் பேரின் இதயங்களை வென்றது இந்நாய். டக்சனின் புகைப்படங்கள் இதுவரை 30 ஆயிரம் லைக்குகள் வாங்கியுள்ளது. இந்த நாயின் தனி இன்ஸ்டாகிராம் கணக்கினை பின்தொடர்பவர்களின் எண்ணிகை 28 ஆயிரம் பேர். உலகின் பல்வேறு பிரபலங்களும் டக்சனையும், உயிர்நேயத்துடன் செயல்படும் இந்நிறுவனத்தையும் வாழ்த்தியுள்ளனர்.
http://dlvr.it/RczNGn
http://dlvr.it/RczNGn