ரிபப்ளிக் டி.வி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் இன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தன்னை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக அவர் போலீஸார் மீது புகார் தெரிவித்துள்ளார்.
#WATCH Republic TV Editor Arnab Goswami detained and taken in a police van by Mumbai Police, earlier today pic.twitter.com/ytYAnpauG0— ANI (@ANI) November 4, 2020
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் டிவி, மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியாகக் கூறப்பட்டது. இந்நிலையில், டிஆர்பி ரேட்டிங் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் மும்பை காவல்துறை வழக்கு பதிந்தது அனைவரும் அறிந்ததே. என்றாலும், டிஆர்பி முறைகேடு விவகாரத்தில் அர்னாப், தற்போது போலீஸாரால் அழைத்து செல்லப்படவில்லை.
Also Read: `அனுமதியில்லாமல் விசாரிக்க முடியாது!’- டி.ஆர்.பி வழக்கில் சி.பி.ஐ-க்குக் கடிவாளம்போட்ட மகாராஷ்டிரா
என்ன வழக்கு?
2018-ம் ஆண்டு அலிபாக் பகுதியை சேர்ந்த கட்டட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் அவரது தாயாருடன் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், அர்னாப் உள்ளிட்ட மூவர் தனக்கு தர வேண்டிய 5.4 கோடி ரூபாயைத் தரவில்லை எனவும், அதனால் தனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது எனவும், அதுவே தனது தற்கொலைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.அர்னாப் கோஸ்வாமி
இந்த நிலையில் 2018-ம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியபட்டது. இந்த வழக்கு 2019 -ல் முடித்தும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கடந்த மே மாதம் இந்த வழக்கு மறு விசாரணை செய்யப்படும் என்றார். அன்வய் நாயக் மகள், அர்னாப் தனது தந்தைக்கு தர வேண்டிய பணம் தொடர்பாக விசாரிக்காமலே வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்-கை சந்தித்து புகார் தெரிவித்ததை தொடர்ந்து இந்த வழக்கின் மறு விசாரணை தொடங்கப்பட்டது.
Also Read: ரிபப்ளிக் டிவி: வீட்டுக்கு மாதம் ரூ.400; `இந்தியா டுடே' பகை - டி.ஆர்.பி விவகாரத்தில் என்ன நடக்கிறது?
தற்போது இந்த வழக்கின் விசாரணைக்காக அர்னாப் போலீஸாரால் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தின் போது போலீஸார் தன்னை தாக்கியதாகவும் அர்னாப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அர்னாப் கைதுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பதியப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இதனை செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.சஞ்சய் ராவத்
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத், ``பழிவாங்கலுக்காக எந்த நடவடிக்கையும் மகாராஷ்டிரா அரசு எடுக்கவில்லை. காவல்துறைக்கு ஒருவருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும்” என்றார். முன்னதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மகராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தை தாக்குவதாக குறிப்பிட்டார்.
http://dlvr.it/RkykhY
http://dlvr.it/RkykhY