நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் 10 நாள்களில் 5 நபர்கள் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயிரிழந்த மூன்று நபர்களையுமே குறிப்பிட்ட ஒரு யானை தாக்கியிருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர்.ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், `ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்' என்ற பெயரில் குறிப்பிட்ட ஷங்கர் என அழைக்கப்படும் உடைந்த கொம்பன் காட்டு யானையைப் பிடிக்கத் திட்டமிடப்பட்டது. இந்தப் பணியில், 4 கும்கிகள்,வ்3 ட்ரோன் கேமிராக்கள், 35 கண்காணிப்பு கேமிராக்கள், நூற்றுக்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் என 5 நாள்களாக பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பகலாகத் தேடி வந்தனர்.
ஒரு வழியாக அந்த யானையை கண்டறிந்து கால்நடை மருத்துவர்கள், யானையின் உடலில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். உடலில் பாய்ந்த மயக்க ஊசியோடு, அரை மயக்கத்தில் தப்பித்த காட்டு யானையை பல இடங்களில் தேடியும் வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
இந்த நிலையில், கேரள மாநிலம் நிலம்பூர் வழிக்கடவு இருட்டுக்குத்தி பழங்குடியினர் கிராமத்தின் அருகில் இந்த யானை இருப்பதைக் கண்டு தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கேரளாவின் அடர் வனத்துக்குள் சென்றுவிட்டதால், யானையை பிடிப்பது இயலாத காரியம் என திட்டத்தைக் கைவிட்டனர்.
Also Read: 3 கும்கிகளுடன் `ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்'... ஒற்றை யானையைத் தேடும் நீலகிரி வனத்துறை!
2 மாதங்களுக்கு பின்னர் இந்த யானை மீண்டும் தமிழகத்துக்குள் வந்துள்ளது. செப்பந்தோடு பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உலவி வரும் இந்த யானையைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், இந்த யானையைப் பிடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
உடைந்த கொம்பன் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர்,``உடைந்த கொம்பன் என்ற காட்டு யானை பல ஆண்டுகளாக தமிழக - கேரள எல்லை வனப்பகுதிகளை பயன்படுத்தி வருகிறது. இரண்டு மாதங்களாக கேரள வனத்தில் இருந்த இந்த யானை, தற்போது நமது எல்லைக்குள் மீண்டும் நுழைந்துள்ளது. செப்பந்தோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். 40 வனத்துறை பணியாளர்கள் மற்றும் சுஜய் என்ற கும்கி யானையும் களத்தில் உள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
http://dlvr.it/Rs0cvW
http://dlvr.it/Rs0cvW