கேரள மாநிலத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக ஆளும் சி.பி.எம் கட்சித் தலைமையிலான எல்.டி.எஃப் ( இடது ஜனநாயக முன்னணி) கூட்டணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப் ( ஐக்கிய ஜனநாயக முன்னணி) கூட்டணி மற்றும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ ( தேசிய ஜனநாயக முன்னணி) கூட்டணிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகின்றன.
எல்.டி.எஃப் கூட்டணியில் ஏற்கெனவே பினராயி விஜயன் முதல்வராக இருக்கிறார். எனவே, எல்.டி.எஃப் கூட்டணியில் பினராயி விஜயனை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி பிரசாரம் நடக்கிறது. யூ.டி.எஃப் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துகிறார். இந்தநிலையில், என்.டி.ஏ கூட்டணி முதல்வர் வேட்பாளராக சமீபத்தில் கட்சியில் இணைந்த மெட்ரோ ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் `மெட்ரோ மேன்’ என்று அழைக்கப்படும் பிரபல பொறியாளர் ஸ்ரீதரன் கேரள பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். மெட்ரோ மேன் ஸ்ரீதரன்
89 வயதான ஸ்ரீதரன், இந்தியாவின் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியவர். இந்திய பொதுப் போக்குவரத்தின் வடிவத்தையே மாற்றியமைத்தவர் என்ற பெருமைக்குரியவர். அவரது பணியை புகழும் வகையிலேயே `இந்தியாவின் மெட்ரோமேன்’ என்று அவர் அழைக்கப்படுகிறார். பத்மவிபூஷண் விருது வென்ற அவர், 2019-ம் ஆண்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் வசித்துவரும் மெட்ரோ ஸ்ரீதரன் தற்போது பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பை கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் வெளியிட்டிருக்கிறார். கேரள பா.ஜ.க சார்பில் நடக்கும் 'விஜய யாத்ரா' என்ற பிரசாரக் கூட்டம் திருவல்லாவில் நடந்தது. அதில் பேசிய கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், ``கேரளத்தின் வளர்ச்சி தடைபட்டிருப்பதற்கு முடிவு காணவும், ஊழல் இல்லாத முன்மாதிரியான வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றவும் மெட்ரோமேன் ஸ்ரீதரனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறோம்.கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்
கொச்சி மெட்ரோ, பாலாரிவட்டம் பாலம் ஆகியவை ஸ்ரீதரனின் சாதனைகள். மெட்ரோமேன் கேரள முதல்வரானால், மாநிலத்தின் முகம் மாறும். மெட்ரோமேன் ஸ்ரீதரனுக்கு ஒரு வாய்ப்பு அளித்தால், நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களை பத்து மடங்காக இங்கு செயல்படுத்தலாம் என்ற பூரண நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.
http://dlvr.it/RtyJWm
http://dlvr.it/RtyJWm