காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றம் சென்றுள்ள கர்நாடகா அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்கம், காவிரி உபரி நீர்க் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் கர்நாடகா அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஜி.எஸ். தனபதி தலைமை வகித்துப் பேசியதாவது, ``விவசாயிகளின் நூறு ஆண்டுக்கால கனவுத் திட்டமான காவிரி-குண்டாறு-வைகை இணைப்புத் திட்டத்தை, கர்நாடகா அரசு கர்நாடகா நீரை மடைமாற்றிச் சேகரிக்கும் வகையில் அமையவுள்ள திட்டம் என்று கூறியுள்ளது. அது தவறானது. காவிரியிலிருந்து 415 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்குக் கிடைக்கிறது. அதில், கர்நாடகா எல்லையிலிருந்து 177.5 டி.எம்.சி தண்ணீர்தான் வருகிறது.கர்நாடகா அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Also Read: மேக்கேதாட்டூ: `ஒன்றிணைவோம் வா எனச் சொன்ன முதல்வர், எங்களை ஒதுக்கியது ஏன்?' - விவசாயிகள் ஆதங்கம்
மீதமுள்ள தண்ணீர் பவானி, நொய்யல், அமராவதி, சரபங்கா, மணிமுத்தாறு உள்ளிட்ட நம்முடைய பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர். இப்படி வெள்ளக்காலங்களில், வெளியேறும் உபரி நீரை வறண்ட மாவட்டங்களின் நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வரையப்பட்டதுதான் இந்தத் திட்டம். குறிப்பாக, 2008-ல் திட்டம் தயார் செய்யப்பட்டு மாயனூர் கதவணை கட்டப்பட்டு, தற்போது இந்தத் திட்டத்தில் கால்வாய் வெட்டும் பணி துவங்கியது. மேக்கேதாட்டூ விவகாரத்தில் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படும் என்பதால்தான் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். மேக்கேதாட்டூ கட்ட நாம் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தங்களுக்குத் தொடர்பில்லாத காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராகக் கர்நாடகா அரசு வழக்கு தொடர்ந்திருப்பது நியாயமற்றது. கண்டிக்கத்தக்கது" என்றார்.
கூட்டத்தில், முன்னிலை வகித்துப் பேசிய தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் குருசாமி, ``நதி நீர் சட்டத்தைப் பொறுத்தவரை மேலமை பாசன உரிமை, கீழமை பாசன உரிமை என்ற இரண்டு உண்டு. அதில் தமிழகம் கீழமை பாசன உரிமையைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, கீழமை பாசன வசதியுள்ள பகுதியானது வறட்சி காலத்தில் வறட்சியைத் தாங்குகிறது, மழைக்காலத்தில் வெள்ளத்தைத் தாங்குகிறது.
இப்படி இங்குள்ள மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், இப்பகுதி ஒரு உரிமை பெற்ற பகுதியாகவும், இங்குச் செயல்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் பன்னாட்டுச் சட்டம், இந்திய அரசியலமைச்சட்டத்தில் 262-வது பிரிவும், 263-வது பிரிவும் அதைத்தான் சொல்கிறது. எனவே, கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கை மேக்கேதாட்டூ அணை கட்டுவதாக இருந்தாலும் சரி, தற்போது காவிரி-குண்டாறு-வைகை இணைப்புத் திட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்திருக்கும் வழக்காக இருந்தாலும் சரி சட்டத்திற்கு விரோதமானது; கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது.
எனவே இதை எதிர்த்து வழக்காடுவது என்று இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனபதி அவர்களின் தீர்மானத்தின் படி, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரீக் மூலமாக இந்த வழக்கிலே தனபதி அவர்கள் இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒரு பார்ட்டியாக இணைந்து இந்த வழக்கை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.குருசாமி
இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், இத்திட்டமானது மாநில திட்டம் மட்டும் அல்ல. ஏற்கெனவே மத்திய அரசின் தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் இருக்கும் ஒரு பகுதி, மத்திய அரசு வரைந்து வைத்த திட்டம். தற்போது மாநில அரசு நிதி ஒதுக்கித் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அவ்வளவுதான்.
நாம் இந்தத் திட்டத்திற்காக கர்நாடகாவிடம் இருந்து தண்ணீர் கேட்கவில்லை. கர்நாடகா அரசுக்கும் இந்த குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. கர்நாடகா அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்கு என்பது குறிப்பாக மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரானது. இந்த வழக்கை அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி என்றுதான் சொல்லணும்.
Also Read: மேக்கேதாட்டு அணை: முனைப்பில் எடியூரப்பா; முறியடிப்பாரா ஸ்டாலின் ?| The Imperfect Show 16/07/2021
இந்த வழக்கு நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும். அதற்கு தமிழக அரசு எதிர் வழக்காட தயாராக இருக்க வேண்டும். காவிரி வழக்கை காவிரி விவசாயிகள் சங்கம் கையில் எடுத்தது போல, காவிரி-குண்டாறு வழக்கை இந்திய விவசாயிகள் சங்கம் கையில் எடுக்கும். அனைத்து விவசாயிகள் சங்கத்திடமும் ஆதரவு கேட்டிருக்கிறோம்" என்றார்.
http://dlvr.it/S4DMrz
http://dlvr.it/S4DMrz