மும்பையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் ஒருவரை மிரட்டி வழக்கை திரும்பப் பெறக்கோரி ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மும்பை அந்தேரி பகுதியில் வசிக்கும் 38 வயதான வைசாலி(பெயர்) என்ற பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் வேறு ஒருவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்தார். வைசாலியின் தொழில் பார்ட்னருக்கு சமூக வலைத்தளம் மூலம் பாபி என்ற பெண் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இதனால் பாபிக்கும், வைசாலிக்கும் மோதல் ஏற்பட்டது. பாபி ஏற்பாடு செய்த ஆட்களால் வைசாலி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக பாபி மற்றும் அவரது நண்பர்கள் ஷாகீர் ஷேக் உட்பட 5 பேர் மீது மால்வானி போலீஸில் வைசாலி புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷாகீர் ஷேக்கை மட்டும் கைது செய்தனர்.
Also Read: மும்பை: மகளின் கராத்தே பெல்ட்; நீட் தேர்வுக்குப் படிக்கச் சொன்ன தாய்க்கு நேர்ந்த கொடூரம்!ஆசிட் வீச்சால் காயமடைந்த கால்
மற்றவர்களிடம் விசாரித்துவிட்டு விட்டுவிட்டனர். அதன் பிறகு பாபி அடிக்கடி வைசாலிக்கு போன் செய்து வழக்கைத் திரும்பப் பெறுமாறு மிரட்டி வந்தார். ஆனால் வைசாலி வழக்கைத் திரும்பப் பெறவில்லை. இந்நிலையில் மும்பையில் வைசாலி மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இரவு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் வைசாலி மீது ஆசிட் நிரப்பப்பட்ட பலூனை வீசினார். அதோடு பாபி மீதுள்ள வழக்கைத் திரும்பப் பெறும்படி கூறி மிரட்டிவிட்டு சென்றார். வீசப்பட்ட ஆசிட் பலூன் வைசாலியின் காலில் விழுந்தது. இதில் அவரது கால் வெந்தது. அப்பகுதி வழியாக வந்த ரோந்து போலீஸார் வைசாலியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிட் வீச்சு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வைசாலி கூறுகையில், ``கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு பாபியிடமிருந்து மிரட்டல் போன் கால்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து போலீஸில் எழுத்துப்பூர்வமாக புகார் செய்துள்ளேன். இப்போது நான் வேலைக்கு சென்றுவிட்டால் தனியாக இருக்கும் எனது மகளுக்கு பாபியால் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. பாபியை கைது செய்யவேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்" என்று தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/S5Rw7K
http://dlvr.it/S5Rw7K