மும்பை புறநகர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது சகோதரன், வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தன்னை வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் செய்தார். புகார் செய்த போது அப்பெண் மைனராக இருந்தார். இதனால் அப்பெண்ணின் அண்ணன் மீது குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பெண்ணின் சகோதரருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. சிறார் வதை
அதேசமயம் இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள தீன்தோஷி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது புகார் அளித்தவரும், விசாரணை அதிகாரியும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தனர். இதில் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண், அப்படியே தனது வாக்குமூலத்தை மாற்றிக்கூறினார்.
`தனது காதலனுடன் வெளியில் செல்வதை தனது சகோதரன் எதிர்த்து தன்னுடன் சண்டையிட்டதோடு தன்னை அடித்ததால் அது போன்ற ஒரு போலியான வன்கொடுமை புகாரை தெரிவித்ததாக’ நீதிமன்றத்தில் தெரிவித்தார். தன்னை தனது சகோதரன் வன்கொடுமை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
Also Read: மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கொடூரச் சம்பவமும் விசாரணை நிலையும் - ஒரு பார்வை
இவ்வழக்கில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், `புகார் செய்த பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை. சம்பவம் நடந்ததாக கூறப்படும் போது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் மைனர் என்பதை நிரூபிக்கவில்லை. எனவே குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்வதாக தெரிவித்தது. தீர்ப்பு
மேலும் பெண்ணின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சொந்த வாக்குமூலத்தை மனுதாரர் மாற்றிக்கூறுகிறார். அவரது வாக்குமூலம் நம்பும் படியாக இல்லை. அதோடு குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரமும் இல்லை. எனவே இவ்வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட நபர் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளாக எந்த தவறும் செய்யாமல் சிறையில் இருந்த சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Also Read: பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்
http://dlvr.it/S6ncCv
http://dlvr.it/S6ncCv