குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிபின் ராவத் மரணத்தை கோவை பீளமேடு பகுதியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் கொண்டாடுகின்றனர் என்று சமூகவலைதளங்களில் ஓர் வீடியோ உலாவிக் கொண்டிருந்தது.வைரல் வீடியோ
Also Read: ஹெலிகாப்டர் விபத்துகள்... அனுபவங்களைப் பகிரும் முன்னாள் அதிகாரிகள்!
அந்த வீடியோவில், இளைஞர்கள் டி.ஜே ஆடுவது போல இருந்தது. இதை கேரளாவில் உள்ள ஓர் இணையதள ஊடகம் செய்தியாகவும் வெளியிட்டிருந்தது.
ஆனால், அந்த வீடியோ ஓர் கல்லூரி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கோவை நேரு கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சமூக வலைதளங்களில் எங்கள் கல்லூரியின் பெயர் மற்றும் மாணவர்கள் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அஞ்சலி
அது எங்கள் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்க நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ. அதுவும், சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோருக்கு, டிசம்பர் 9-ம் தேதி எங்கள் கல்லூரியில் அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். எங்கள் கல்வி நிறுவனத்தின், நிறுவனர் தாஸ் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அப்படி இருக்கும்போது, இதுபோன்ற தவறான தகவல்கள் எங்களை காயப்படுத்துகிறது.அஞ்சலி
தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர். மேலும், அந்த கேரள இணையதள ஊடகம் மீது, கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SFG0Ll
http://dlvr.it/SFG0Ll