பெரும்பாலான வீடுகளில் பாசம் கொட்டி, நேசம் கொட்டி அன்போடு வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணிகளை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மக்கள் பார்ப்பதுண்டு. சமயங்களில் அளவு கடந்த பாசத்தினால் செல்லபிராணிகளின் ஸ்பெஷல் நாளை தடபுடலாக விழா எடுத்து கொண்டாடுவதும் உண்டு. அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசித்து வரும் குடும்பம் ஒன்று தங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் Abby என்ற வளர்ப்பு நாயின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியதற்காக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றனர்.
Abby பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 7 லட்ச ரூபாயை அந்த குடும்பம் செலவு செய்துள்ளது. அதற்கென Nikol பகுதியில் ஒரு காலி இடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் கூடாரம் அமைத்து பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. அதோடு விழாவில் கலந்து கொள்ளும் வகையில் பல மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு Abby புகைப்படத்தை கொண்டு உள் அலங்கார வேலைகளும் நடந்துள்ளன.
விழாவில் Abby கருப்பு நிற துணி அணிந்த படி பங்கேற்றுள்ளது. இருப்பினும் இந்த விழாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் விழாவில் பங்கேற்ற பலர் மாஸ்க் அணியவில்லை என தெரிகிறது.
http://dlvr.it/SGlhWW
http://dlvr.it/SGlhWW