முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது.தலைமைச் செயலகத்தில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளார். கடந்த 10 மாதங்களில் அரசு வெளியிட்டு அமல்படுத்திய திட்டங்களின் செயல்பாட்டை அறிந்து கொள்ளும் முதலமைச்சர், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்திடுவதற்கான ஆலோசனை வழங்க உள்ளார். வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை ஆட்சியர் வாயிலாக அறிந்து, அவற்றின் அடிப்படையில் சிறப்பான திட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.இதையும் படிக்க: 30 வருட சிறைவாசத்தில் முதன்முறையாக பேரறிவாளனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு
http://dlvr.it/SLQGpl
http://dlvr.it/SLQGpl