கோலி களத்தில் சிறப்பாக பேட் செய்யும்போது நாங்கள் மகிழ்ந்தோம் - பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மோசமாக ஃபார்ம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்தது. இம்முறை டக் அவுட்டை தவிர்த்தபோதும், கோலியால் பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. 14 பந்துகளை எதிர்கொண்டு சிறிது நேரம் களத்தில் இருந்த கோலி, தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவிடம் சிக்கி அவுட் ஆகும்போது வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இருப்பினும், அவர் கிரீஸில் இருந்த நேரத்தில், ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்து இருந்தார். இம்முறை அவுட் ஆகும்போது கோலி புன்னகையை உதிர்க்கவில்லை. மாறாக வழக்கமாக ஆத்திரத்துடன் தனது மட்டையை கோபத்தில் அறைந்தார். மூன்றாவது நடுவர் மறுஆய்வு முறை மூலம் அவுட் என்று தீர்ப்பளித்தபோது விரக்தியுடன் வெளியேறினார்.
கோலியின் அவுட்டான பின், அவரது எதிரணியான பஞ்சாப் கிங்ஸ் அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை வெளியிட்டது. பஞ்சாப் கிங்ஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் அந்த செய்தியை வெளியிட்டது. “விராட் கோலி, களத்தில் நீடிக்கும் வரை நாங்கள் கூட ரசித்தோம். அதிர்ஷ்டம் விரைவில் உங்கள் பக்கம் திரும்பும் என்று நம்புகிறோம்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தது பஞ்சாப் கிங்ஸ்.
View this post on Instagram
Shared post on Time
Santeqniki
கோலியின் ஃபார்ம் ஆர்சிபிக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் கவலையாக உள்ளது. முகமது ரிஸ்வான் போன்ற சர்வதேச நட்சத்திரங்கள், முன்னாள் இந்திய கேப்டன் கோலியை விரைவில் ஃபார்மிற்கு திரும்பப் பார்ப்பார்கள் என்றும், இந்த கடினமான காலங்களில் அவருக்காக தாங்கள் உணர்கிறோம் என்றும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
கோலி 2019 ஆம் ஆண்டில் இருந்து ஒரு சதம் கூட அடிக்காமல் இருக்கிறார். மேலும் அவரது ஆட்டமிழக்கும் முறை ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல நிபுணர்கள் கோலிக்கு தனது கிரிக்கெட் ஃபார்மை மீட்டெடுக்க அவருக்கு நீண்ட இடைவெளி கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SQMVRs
http://dlvr.it/SQMVRs