Tuesday, 7 June 2022
எல்லாம் மத்திய அரசு பார்த்து கொள்ளும்! - வாசகர்களின் கமெண்ட்ஸ்
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 6-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, 'வெறுப்பு பேச்சுகளால் வளைகுடா நாடுகள் இந்தியாவிற்கு கண்டனம்... வெளியுறவு கொள்கையை எப்படி கையாளப் போகிறது இந்தியா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Nellai D Muthuselvam யாருக்காகவும் வெளியுறவு கொள்கைகளில் எந்த நாளும் சமசரம் செய்யாது இந்தியா. வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த வளைகுடா நாடுகள் மியான்மர் , சீனாவில்,சிரியாவில் இஸ்லாமியர்களை படுகொலை செய்கிறார்களே அதை தடுக்க முடியாத போதே இவர்கள் வலிமை ஒற்றுமை புரிந்தது . இஸ்லாமிய அகதிகளை ஏற்க மனமில்லாத நாடுகள் அவை. அவற்றின் கண்டனங்களை இந்தியா பெரிதுபடுத்த தேவையில்லை. இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். வளைகுடா நாடுகளுக்கு இந்திய அரசு அளித்த விளக்கம் போதுமானது.
Jayaseelan எல்லாம் மத்திய அரசு பார்த்து கொள்ளும்.... ரொம்ப குழம்ப வேண்டாம்.
Akbarali Mohamed மதங்கள் என்பது கண்ணாடி கூண்டு; அடுத்தவன் கூண்டை நீ தாக்கும் போது உன் கண்ணாடி கூண்டு இன்னும் பலமாக தாக்கப்படும் என்பதை மறவாதே.
Cheraman Hakeem
இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளால் அந்த கட்சியை சார்ந்தவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் அந்த கட்சியும் விரும்புகிறது என கடந்த கால அரசியல் செயல்பாட்டின் மூலமாக உணரமுடிகிறது.
Kuberanஇருக்கவே இருக்கு பேராயுதம் பாகிஸ்தான் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்வார்கள் நேருவின் மீதும் பழி போட்டு தப்பித்துக் கொள்வார்கள்.
Jana
அதான் BycottQatarAirways னு hashtag போட்டு டிரென்ட் பண்ணி, அவங்க economy ah செத்தச்சுட்டோம்ல.
S.J.DASHNAஉலக நாடுகள் இந்தியாவை நோக்கி படை எடுத்தாலும் அதற்கு மத்திய பாசிச பாஜக அரசுதான் முழு காரணம்.
இதையும் படிக்கலாமே: `பாஜகவின் வளர்ச்சி தி.மு.க.வுக்குதான் சரிவை ஏற்படுத்தும்!'- வாசகர்களின் கமெண்ட்ஸ்
http://dlvr.it/SRm22T
http://dlvr.it/SRm22T
டான் படம் குறித்த அத்தனை உண்மைகளையும் உடைக்கவா? -உதயநிதி
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் சக்சஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி பேசும்போது, "படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள், இந்த படம் வெற்றிபெறும் என்று ஆடியோ வெளியீடு அன்றே சொன்னேன். அது நடந்துள்ளது. இந்த படத்தின் கதையை நான் கேட்டேன். நன்றாக இருந்தது ஆனால், நான் நடிக்கவில்லை, ஏனென்றால் பள்ளிக்கூட காட்சிகள் மற்றும் எமோசன் காட்சிகளில் சிவா சிறப்பாக நடித்திருக்கிறார், நான் நடித்திருந்தால் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று பேசினார்.
http://dlvr.it/SRm1l3
http://dlvr.it/SRm1l3
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடித்துள்ள ‘அரபி’ டீசர் வெளியீடு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த 32 வயதான கே.எஸ். விஸ்வாஸ் இரு கைகளை இழந்தநிலையிலும், பாரா நீச்சல் போட்டியில் ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார். இவர் 10 வயதாக இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்விபத்தில் இவரது தந்தை உயிரிழந்தநிலையில், விஸ்வாஸ் கைகளை இழந்து கோமாவிற்கு சென்று பின்னர் குணமடைந்தார். எனினும், தன்னம்பிக்கை இழக்கமால் குங்ஃபூ, நடனம், பாரா நீச்சல் என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துகொண்டு தன்னம்பிக்கையுடன், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல கன்னட திரையுலக இயக்குநர் ராஜ்குமார், விஸ்வாஸின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘அரபி’ (‘Arabbie’) என்ற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுக்கொண்டு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்பட்டவருமான, தற்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விஸ்வாஸின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். கடந்த 27-ம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாக இருந்தநிலையில், தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
http://dlvr.it/SRm18F
http://dlvr.it/SRm18F
காஷ்மீரில் இரட்டை என்கவுன்ட்டர் - 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரில் நடந்த இரட்டை என்கவுன்ட்டர் சம்பவங்களில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கண்டி பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார், சிஆர்பிஎஃப் வீரர்கள், ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு கண்டி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் தங்களை நெருங்குவதை உணர்ந்த தீவிரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆவார். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் தீவிரவாதி எதற்காக காஷ்மீருக்கு வந்தார்; பெரிய தாக்குதலுக்கு இவர்கள் திட்டம் தீட்டினார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல, பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள பானிபோரா வனப்பகுதியில் நேற்று இரவு நடந்த என்கவுன்ட்டர் சம்வபத்தில் ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கொல்லப்பட்டார்.
http://dlvr.it/SRm174
http://dlvr.it/SRm174
Tuesday, 17 May 2022
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
பெரிதும் எதிர்பார்கப்பட்ட எல்.ஐ.சி இன்று வர்த்தகத்தை தொடங்கியது. சந்தையில் ஏற்கெனவே கணிகப்பட்டதை போல முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விலையை விட குறைவாகவே பட்டியலானது.
ஒரு பங்கு ரூ.949க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 8.6 சதவீதம் குறைந்து 867 ரூபாய்க்கு வர்த்தகத்தை தொடங்கியது. ஆனால் குறைந்தபட்ச விலையாக ரூ.860 வரைக்கும் விலை சரிந்தது.
எல்.ஐ.சி. பட்டியலாகும்போது சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு இருந்தது. ஆனால் பட்டியலான பிறகு சுமார் 42,000 கோடி ரூபாய் வரை சந்தை மதிப்பு குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு குறைந்த விலையில் பங்குகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ததைவிடவும் குறைவாகவே தற்போது எல்.ஐ.சி. பங்குகள் வர்த்தகமாகின்றன.
பணியாளர்களுக்கு ரூ.904க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலிசிதாரர்களுக்கு ரூ.889க்கு ஒதுக்கப்பட்டது. இதர சிறு முதலீட்டாளர்களுக்கு ரூ.949க்கு வழங்கப்பட்டது. ஆனால் அனைத்து தரப்புக்குமே எல்.ஐ.சி முதலீடு தற்போது நஷ்டத்தையே வழங்கி இருக்கிறது.
அடுத்து என்ன?
எல்.ஐ.சியின் சந்தை மதிப்பு கவர்ச்சிகரமாகவே இருக்கிறது. இருந்தும் சந்தை சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால் எல்.ஐ.சி. பங்குகள் தள்ளுபடியில் வர்த்தகமாகின்றன. ஏற்கெனவே பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடரலாம். ஒருவேளை ஐபிஓவில் கிடைக்கவில்லை என்றால் புதிதாக முதலீடும் செய்யலாம். எல்.ஐ.சியில் புதிய முதலீட்டுக்கு இது சரியான வாய்ப்பு என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
நீண்ட கால முதலீட்டில் பங்குச்சந்தையை அணுகுபவர்களுக்கு இது சரியான தருணம். பங்குகளின் விலை குறைய குறைய, முதலீட்டை மேலும் உயர்த்தலாம். நடப்பு ஆண்டில் நல்ல டிவிடெண்ட் கிடைக்க கூடும் என்றும் சில சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
காப்பீடு குறித்து விழிப்புணர்வு தற்போது தொடர்ந்து உயர்ந்துவருகிறது. எல்.ஐ.சி. பெரும்பான்மையான சந்தையை வைத்திருப்பதால் விழிப்புணர்வு உயரும்போது காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை உயரும். அது எல்.ஐ.சி.க்கு சாதகமாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஐந்தாவது பெரிய நிறுவனம்
பங்குச்சந்தையில் பட்டியலான பிறகு இந்தியாவில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக எல்.ஐ.சி உயர்ந்திருக்கிறது. முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளது. இரண்டாம் இடத்தில் டிசிஎஸ்-ம், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களும் உள்ளன.
ஐந்தாம் இடத்தில் எல்.ஐசி இருக்கிறது. சுமார் ரூ.5.56 லட்சம் கோடி சந்தை மதிப்பில் வர்த்தகமாகிறது. இதற்கடுத்து ஆறாவது இடத்தில் ஹெச்.யூ.எல். நிறுவனம் இருக்கிறது. எல்.ஐ.சி பங்குகள் மேலும் சரிவை சந்தித்தாலோ அல்லது ஹெச்.யு.எல். பங்கு விலையில் ஏற்றம் இருந்தாலோ ஐந்தாம் இடத்தில் இருக்கும் எல்.ஐ.சி. ஆறாம் இடத்துக்கு தள்ளப்படலாம்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம் எல்.ஐ.சி. என்னும் கணிப்புகள் இருந்தன. ரிலையன்ஸுக்கு அடுத்து அதிக சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கம் காரணமாக சந்தை மதிப்பு குறைந்தது.
அதேபோல முன்பு 5 சதவீத பங்குகளை விலக்கிகொள்ள திட்டமிட்டது. ஆனால் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 3.5 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. தற்போது அந்த பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகின்றன.
http://dlvr.it/SQY99k
http://dlvr.it/SQY99k
உத்தரப்பிரதேசம்: கியான்வாபி மசூதியில் சிவலிங்கம்? - சர்ச்சையும் பின்னணியும்!
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே கியான்வாபி என்ற மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கௌரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், சிங்கார கௌரி அம்மனுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஐந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக கியான்வாபி மசூதியிலுள்ள கோயிலை மறுசீரமைக்க வேண்டும் என 1991-ம் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிா்த்து சன்னி வக்பு வாரியம், அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் ஆகியவை தொடுத்த வழக்கில் மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.
இந்நிலையில், கியான்வாபி மசூதியின் சுவரிலுள்ள சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தாக்கலான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதை விசாரித்த மாவட்ட நீதிபதி ரவிகுமாா் திவாகா், மசூதியை அளவிட்டு வீடியோ பதிவுசெய்து மே 17-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்தப் பணிகளை மேற்கொள்ளக் குழு அமைத்து கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார். இந்த ஆய்வை மேற்கொள்ளக் கூடாது என்று மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இந்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இந்தஜாமியா மசூதி கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ``இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பார்க்காததால், இப்போது கள ஆய்வுக்குத் தடை விதிக்க முடியாது" என்று கூறியது. எனினும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். கியான்வாபி மசூதி
இந்நிலையில் மசூதியில் கடந்த சனிக்கிழமை தொடங்கி மூன்று நாள்களாக நடந்த ஆய்வு நேற்று (16-ம் தேதி) நிறைவுபெற்றது. இந்த ஆய்வில் வழக்கறிஞர் ஆணையர் அஜய்குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், மனுதாரர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள் ஆகியோர் என மொத்தம் 36 பேர் இருந்தனர். ஆய்வின்போது எதுவும் அசம்பாவிதம் நடைபெற்றுவிடக் கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மசூதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்படி, நடைபெற்ற ஆய்வில் மசூதியின் உள்ளே இருந்த செயற்கைக் குளத்தில் சிவலிங்கம் கிடைக்கப்பெற்றதாகக் கூறி, ஹரிஷங்கர் ஜெயின் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுகினார். மேலும், மசூதி வளாகத்துக்குள் உள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதியை சீல் வைக்குமாறும், அந்தப் பகுதிக்குள் ஆட்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதன்படி, வளாக பகுதியைப் பூட்டி சீல் வைக்க பனாரஸ் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஆட்கள் யாரும் உள்ளே சென்றுவிடாமல் தடுக்க வளாகப் பகுதி சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வின்போது சிலை எதுவும் கிடைத்ததாக ஆய்வுக்குழுத் தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அதேபோல, ஆய்வுப் பணிகள் முழுவதையும் வீடியோ பதிவுசெய்து, அது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.ஞானவாபி மசூதி
தற்போது வெளியான இந்தத் தகவலை மசூதி நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும், குளத்துக்குள் இருப்பது சிவலிங்கம் இல்லை என்றும், அந்தக் குளம் மசூதிக்கு வருபவர்கள் தொழுகைக்கு முன்பு தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான செயற்கை நீரூற்று அமைப்புகொண்டது என்று மசூதி தரப்பு தெரிவித்துள்ளது. இதையே ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நடைபெறும் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் போக்கை வைத்தே அடுத்தகட்ட விவரம் தெரியவரும்! ``ஞானவாபி மசூதி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் அல்ல... நீரூற்று" - அசாதுதீன் ஒவைசி
http://dlvr.it/SQXcBN
http://dlvr.it/SQXcBN