சிறுமியுடன் ஓடிப்போய் திருமணம் செய்ய திட்டமிட்ட இளைஞரை பெற்றோர் தடுத்ததால் ஆத்திரத்தில் அவர்களை குக்கரால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான ஒரு நபர், 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்ட அந்நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.அப்போது சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்த அந்நபரின் பெற்றோர், மகனை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது மகனுக்கும் பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் தனது தாய், தந்தை இருவரையும் கையில் கிடைத்த சுத்தியல், பிரஷர் குக்கரை கொண்டு பலமாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பெற்றோர் வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இதையடுத்து தப்பியோடிய அந்த நபர், சிறுமியை அழைத்துச் சென்று ஒரு வாடகை வீட்டில் இருந்துள்ளார்.
மறுநாள் காலையில் தம்பதியர் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையும் படிக்க: உசிலம்பட்டி: வாகன சோதனையில் சிக்கிய தம்பதி! தொழிலதிபரின் குழந்தையை கடத்தியது அம்பலம்
http://dlvr.it/SWMzRF
http://dlvr.it/SWMzRF