உத்தரப்பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்திலுள்ள கென் ஆற்றங்கரையில் குடிநீர் எடுக்கச் சென்ற முதியவர் ஒருவர் அங்குள்ள சதுப்புநிலச் சகதியில் மாட்டிக்கொண்டார். அவரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்டிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது.
அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் சதுப்புநிலச் சகதியில் இடுப்பு அளவுக்குச் சிக்கிக்கொண்டு தவிக்க, ஒருவர் மரக்கொம்பை முதியவரிடம் கொடுத்து அவரை மீட்க முயல்கிறார். சகதியில் மாட்டிக்கொண்ட முதியவரின் அருகில் அவர் தண்ணீர் பிடிக்க எடுத்துவந்த குடமும் கிடக்கிறது.சகதியில் சிக்கித் தவித்த முதியவர்!
அதோடு முதியவரைக் காப்பாற்றும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதை காவலர் ஒருவர் சிரித்துக்கொண்டே தன் மொபைலில் வீடியோ பதிவுசெய்கிறார். சுற்றி நிற்கும் மக்கள் குடிநீர்ப் பிரச்னைக் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்... இப்படியாக அந்த வீடியோ முடிகிறது.
பின்னர் அந்த முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரைப்போலவே அந்த ஆற்றின் சகதியில் மற்றொருவரும் சிக்கி, பின்னர் மக்களால் மீட்கப்பட்டார். ``உள்ளூரில் தண்ணீர்க் குழாய்களில் வரும் நீர் உப்பாக இருப்பதால், அதைக் குடிநீராகப் பயன்படுத்த இயலாது. எனவே, கிராமத்தில் அனைவரும் இந்த ஆற்றுத்தண்ணீரையே குடிநீராகப் பயன்படுத்திவருகிறோம்.
மாநிலத்தின் ஜல் சக்தி அமைச்சர் `Namami Gange' திட்டத்துக்காக சமீபத்தில் ஹமீர்பூர் வந்தார். அப்போது எல்லோருக்கும் விரைவில் குழாயில் குடிநீர் கிடைக்கும்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அது எப்போது நிறைவேறப்போகிறது என்று தெரியவில்லை" எனப் புலம்புகிறார்கள் பகுதி மக்கள். உ.பி: சிறார் வதையால் சிறுமி கர்ப்பம்; திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று தீ வைத்த கொடூரம்!
http://dlvr.it/SZsgBJ
http://dlvr.it/SZsgBJ