உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2015-ம் ஆண்டு திடீரென காணாமல் போய்விட்டார். அவரை அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து, விஷ்ணு கைதுசெய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். விஷ்ணு தன் தாயாரிடம் சம்பந்தப்பட்ட பெண்ணை கடத்தவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால் விஷ்ணுவின் தாயார் அந்தப் பெண்ணை தேடிக்கண்டுபிடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில், ஆக்ராவில் பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது காணாமல்போன பெண்ணின் உடல்தான் என்று அந்தப் பெண்ணின் தந்தை அடையாளம் காட்டினார். இதையடுத்து, விஷ்ணு மீது கொலை வழக்கை கூடுதலாக சேர்த்தனர் போலீஸார். இந்த நிலையில், காணாமல்போன பெண் ஹத்ராஸ் என்ற இடத்தில் இருப்பதை விஷ்ணுவின் தாயார் கண்டுபிடித்தார். அந்தப் பெண், அங்கு மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்திருந்தார். இது குறித்து விஷ்ணுவின் தாயார் உடனே போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து சென்று அந்தப் பெண்ணை அழைத்து வந்திருக்கின்றனர்.கைது
அவர் உண்மையிலேயே காணாமல்போன பெண்தானா என்பதை தெரிந்து கொள்ள அவருக்கு டி.என்.ஏ சோதனை எடுக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். அந்தச் சோதனைக்குப் பிறகே விஷ்ணுவை விடுவிடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி ராகவேந்திரா தெரிவித்தார். மகனுக்காக 7 ஆண்டுகளாக அந்தப் பெண்ணை தேடிய தாய் இது குறித்து, ``என் மகன் மீது வீணாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கின்றனர் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் என் மகன் நிரபராதி என்பதை நிரூபிக்க நானே களத்தில் இறங்கி வேலை செய்தேன்" என்றார்.பாலிய பலாத்காரம் செய்த வாலிபரிடம் ரூ.1 லட்சம் பெற்று கொண்டு சமரசமான பெண்!
http://dlvr.it/Sf21mD
http://dlvr.it/Sf21mD