மத்தியப் பிரதேச மாநிலத்தில், ராணுவ வீரர்களுக்காக ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட 4,000 முட்டைகளை டிரைவர் களவாடிச்சென்ற சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.
குவாலியர் மாவட்டத்தின், முரார் பகுதியிலுள்ள ராணுவ கன்டோன்மென்ட் மெஸ்ஸுக்கு உணவுப்பொருள்களை சப்ளை செய்பவர் நிஜாமுதீன் கான். ஒப்பந்ததாரரான இவர், நேற்று நான்காயிரம் முட்டைகளை ராணுவ கன்டோன்மென்ட் மெஸ்ஸுக்கு சப்ளை செய்வதற்காக வாங்கியிருக்கிறார். வாங்கிய முட்டைகளை மெஸ்ஸுக்குக் கொண்டு செல்வதற்காக ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.முட்டைகள்
பின்னர் முட்டைகளை ஆட்டோவில் ஏற்றிய பிறகு, தன்னுடைய மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து வருமாறு ஆட்டோ டிரைவரிடம் கூறியிருக்கிறார் அவர். ஆட்டோ டிரைவரும் அப்படியே செல்ல, ஓரிடத்தில் போக்குவரத்து நெரிசலில் ஒப்பந்தாரரின் மோட்டார் சைக்கிள் சிக்கியதையடுத்து, இதுதான் வாய்ப்பு என முட்டைகளை ஏற்றிவந்த ஆட்டோவோடு டிரைவர் மாயமாகிவிட்டார். இது தெரியாமல் வெகுநேரம் காத்திருந்த ஒப்பந்ததாரர், ஆட்டோ டிரைவர் முட்டைகளை களவாடிச்சென்றதை உணர்ந்து போலீஸில் இது பற்றி புகாரளித்திருக்கிறார்.வழக்கு பதிவு
போலீஸாரும் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவுசெய்து, விசாரணையைத் தொடங்கினர். அதில் ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து முராரைச் சேர்ந்த முகேஷ் சர்மாவை போலீஸார் கண்டறிந்தனர். இது குறித்து போலீஸாரும், முகேஷ் சர்மா ஆட்டோவுடன் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தீவிரமாகத் தேடிவருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.‘ரயில் திருட்டு... பாலத்தைக் கழற்று’ - யாரு சாமி நீங்கள்லாம்..?
http://dlvr.it/SfGylV
http://dlvr.it/SfGylV