நடிகர் அமிதாப்பச்சனுக்கு மாநில அரசு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இதற்காக எந்நேரமும் இரண்டு போலீஸார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 2015-ம் ஆண்டு ஜிதேந்திர ஷிண்டே என்ற கான்ஸ்டபிள் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு வரை அமிதாப்பச்சன் பாதுகாப்பு பணியிலிருந்தார். அமிதாப்பச்சன் குடும்பத்தில் ஒருவராகவே ஜிதேந்திர ஷிண்டே மாறினார்.
ஆனால் பணியிலிருந்த போது அமிதாப்பச்சனின் நட்பை பயன்படுத்தி சொந்தமாக செக்யூரிட்டி ஏஜென்சி தொடங்கி நடத்தி வந்தார் ஷிண்டே என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் சினிமா துறையில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தார். தன்னுடைய மனைவி பெயரில் தொடங்கி நடத்தி வந்த இந்த செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் ஷிண்டே கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாக செய்தி வெளியானது. அமிதாப்பச்சன்
வழக்கமாக ஒரு போலீஸ்காரர் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணிபுரியக்கூடாது. ஆனால் ஷிண்டே 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததோடு, சொந்தமாக செக்யூரிட்டி ஏஜென்சியும் நடத்தி வந்தார். இது குறித்து போலீஸ் துறைக்கு தெரிய வந்ததால் உடனே ஷிண்டே 2021-ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது இலாகா பூர்வ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் விதிகளை மீறி ஷிண்டே அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பதாகவும், அதோடு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி அளவுக்கு சம்பாதித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அடிக்கடி சொத்துக்களை வாங்கி விற்பனை செய்திருந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து ஷிண்டேயிக்கு இம்மாத தொடக்கத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஷிண்டே கொடுத்த விளக்கம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து காவல் துறை ஷிண்டேயிக்கு கட்டாய ஓய்வு கொடுத்திருக்கிறது. ஷிண்டே 27 ஆண்டுகள் போலீஸ் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். Amitabh Bachchan: நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்; 80 வது பிறந்தநாளில் உற்சாகமான அமிதாப் பச்சன்!
http://dlvr.it/SfqTP4
http://dlvr.it/SfqTP4