2022- 2023 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பைத் தொடர் கடந்த மாதம் டிசம்பர் 13ம் தேதியிலிருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கவுகாத்தியில் மும்பை - அசாம் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. அதில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய பிரித்வி ஷா சாதனை படைத்துள்ளார். பிரித்வி ஷா
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 98.96 ஸ்டிரைக் ரேட்டில் 383 பந்துகளில் 379 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 49 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். பிரித்வி ஷா 379 ரன்களை எடுத்ததன் மூலம் ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் பல வீரர்களின் சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். முதலாவது வீராக 443 ரன்கள் குவித்த நிம்பல்கர் உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் அவர் இடம் பெறவில்லை. பல சாதனைகள் புரிந்த பிரித்திவி ஷா அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
http://dlvr.it/Sgph9h
http://dlvr.it/Sgph9h