Monday, 6 March 2023
Sunday, 5 March 2023
வாரிசு ரிலீசுக்கு முன் ரிலீசுக்கு பின்.. விஜய்யை சீண்டினாரா தில் ராஜு? ட்ரெண்டாகும் வீடியோ
வாரிசு படத்தின் இசை வெளியீட்டின் போது தயாரிப்பாளர் தில் ராஜூ விஜய் குறித்தும், வாரிசு படம் குறித்தும், “டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, ஃபேமிலி சென்டிமென்ட் வேணுமா அதுவும் இருக்கு” என பேசியது படத்துக்கு வந்த வரவேற்பை விட அதிகளவில் சமூக வலைதளங்களில் வைரலானது.
தில் ராஜூ பேசியதை பின்னணி இசையெல்லாம் கோர்த்து அதனை ரீமிக்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாகவும் கொடிக்கட்டி பறந்தது. மேலும் தில் ராஜு பாணியை மீம் டெம்ப்ளேட்டாகவே உருவாக்கி தினந்தோறும் விதவிதமான மீம்களையும் நெட்டிசன்கள் பறக்கவிட்டு வருகிறார்கள்.ஒருகட்டத்தில் தயாரிப்பாளரை ட்ரோல் மெட்டீரியலாகவே இணையவாசிகள் மாற்றிவிட்டார்கள்.
Oh Hello! Do you think your Karaoke can beat this Varisu Audio Launch speech! Please watch https://t.co/IdXBf4WEMH
— Sai Siddartha Maram (@SiddarthaMaram) February 25, 2023
இருப்பினும் இதனை மிகவும் எளிதாகவே தில் ராஜூ எடுத்துக் கொண்டதால் அவருடைய பெருந்தன்மையையும் சினிமா வட்டாரத்தினர் பாராட்டியும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள பாலகம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று கடந்த பிப்ரவரி 28ம் தேதி தெலங்கனாவில் நடந்தது. இந்த படத்தையும் தில் ராஜூவே தயாரித்திருக்கிறார்.
Post Release Speech By Dilraju About Varisu : pic.twitter.com/zTtGFPw6B9
— Kwood Gangster (@KWood_Gangster) March 3, 2023
இந்த நிகழ்ச்சியின் போது வாரிசு பட விழாவின் போது தான் பேசியதையே ஸ்பூஃப் செய்யும் வகையில் தில் ராஜூ பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதில், “தமிழ்நாட்டுல என்னோட பேச்சு ரொம்ப பிரபலமாகிருக்கு. இந்த படத்துல ஃபைட்ஸ் இல்ல, இந்த படத்துல டான்ஸ் இல்ல, இந்த படத்துல விஜய் சாரோட பாடி லேங்வெஜ் இல்ல, ஆனா, இந்த படத்துல சூப்பர் என்டெர்டெயின்மென்ட் இருக்கு, சூப்பர் எமோஷன்ஸ் இருக்கு, சூப்பர் தெலங்கனா நேட்டிவிட்டி இருக்கு, இது நம்ம மனசுக்கு பிடிச்சமான சினிமா. இத மட்டும் சொல்லிக்கிறேன். நன்றி.” என தில் ராஜூ பேசியிருந்தார். இதனைக் கண்ட இணையவாசிகள், “தன்னை ட்ரோல் செய்தவர்களையும் மதிக்கும் வகையில் செல்ஃப் ட்ரோல் செய்திருக்கிறார். அருமை” நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்கள்.
http://dlvr.it/SkNf8X
http://dlvr.it/SkNf8X
Saturday, 4 March 2023
`அதிமுக பாஜக-போல் பிரிந்து வாழக் கூடாது; திமுக கூட்டணிபோல் சேர்ந்து வாழணும்’ - உதயநிதியின் வாழ்த்து
திருமண நிகழ்ச்சிகள், சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கிவைத்தல், பள்ளிகளில் ஆய்வு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம், கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி, நாமக்கல் நகரிலுள்ள கவிஞர் ராமலிங்கம் அரசுப் பெண்கள் கல்லூரியில், கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலையைத் திறந்துவைத்தல், மோகனூர் சர்க்கரை ஆலையைப் பார்வையிடல் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, அமைச்சர் உதயநிதி நாமக்கலுக்கு வருகை தந்தார். காலையில் வெட்டுக்காட்டுப் பகுதியில் நடைபெற்ற, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுச்சாமியின் பேரன் நவஜீவன், வித்யா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். திருமண நிகழ்வில் உதயநிதி
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, தி.மு.க கூட்டணியைப்போல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணிபோல் பிரிந்து வாழக் கூடாது. அப்படி வாழ்ந்தால், ரோட்டில் போவோர்கூட கருத்து சொல்வார்கள்" என்று பேசினார். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டவர், மாலையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் திருவுருவச் சிலையை திறந்துவைத்தார்.
அதன் பிறகு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``தனியார் இடத்திலாவது இந்தச் சிலையை நாங்கள் வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும் என்று கேட்டார்கள். நம்முடைய தலைவர் முதலமைச்சர் அவர்கள்தான், நாமக்கல் கவிஞருடைய சிலை தனியார் இடத்தில் அமையக் கூடாது, அது பொதுவான இடத்தில், அதுவும் ஒரு கல்லூரியில் மாணவ, மாணவிகள் பயிலும் இடத்தில் அமைய வேண்டும் என்று சொல்லி, இங்கே சிலை அமைய வழிவகை செய்தார். கவிஞருடையது, எளிமையான குடும்பப் பின்னணி. ஆனால், தன்னுடைய வலிமையான தமிழ்ப் புலமையால் கவிதைகள் எழுதி புகழ்பெற்றவர். மட்டுமல்லாமல் விடுதலைக்காக முழுமையாக தமிழ் மொழியைப் பயன்படுத்தியவர். அதேபோல், நம்முடைய கவிஞர் அவர்கள் சிறந்த பேச்சாளரும்கூட. அவருடைய மேடைப்பேச்சுகள் சாதாரண மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வை ஏற்படுத்தின. நாமக்கல் கவிஞர் சிலையைத் திறக்கும் உதயநிதி
நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்து சுதந்திரத்துக்காகப் போராடினார். 10 வருட காலம் முழுவதும் காங்கிரஸுக்காகப் பாடுபட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக, மகாத்மா காந்தி தலைமையில் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதில், வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ராஜாஜி அவர்களுடன் கலந்துகொண்டவர்தான் நம்முடைய நாமக்கல் கவிஞர். அப்போதுதான், `கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்ற தேசபக்திப் பாடலை இயற்றினார்.
அந்தப் பாடல் ஏற்படுத்திய விடுதலைப் போராட்ட உணர்வு என்பது மிக அதிகம். பின்னர் ஒருநாள் நாமக்கல் கவிஞர் காந்தியைச் சந்தித்தபோது, அந்தப் பாடலை இயற்றித் தந்ததற்காக அவரைப் பாராட்டினார் காந்தி. அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த நம்முடைய நாமக்கல் கவிஞரின் புகழை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டியது நம்முடைய கடமை. இப்போது இருக்கிற நம்முடைய சமூகம் அனைத்தையும், அனைவரையும் மறந்துவிடக்கூடிய சமூகம். நம்முடைய முதலமைச்சர், கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்து பல முன்னோடித் திட்டங்களை தீட்டிவருகிறார் என்பது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். மாணவ, மாணவிகளைப் பள்ளிக்கு வரவழைக்க முதலமைச்சர் காலை சிற்றுண்டித் திட்டம் கொண்டுவந்தார். விழாவில் உதயநிதி
அவர்கள் காலையில் ஸ்கூலுக்கு வர வேண்டுமென்றால், பசியோடு வரக் கூடாது, மாணவர்கள் வந்து படிக்கணும், மாணவ, மாணவிகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற ஒரே நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்ட திட்டத்தில், தற்போது கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுவருகிறார்கள். அதேபோல், இலவச பேருந்துப் பயணம் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த 20 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 250 கோடிப் பயணங்களை மகளிர் இலவசமாக, கட்டணமில்லாமல் மேற்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் முன்னேற, இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. அதுவும் பத்தோடு பதினொன்றோடு நிற்காமல் நாம் என்னவாக வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆழ்மனதில் ஓர் எண்ணம் இருக்கும். முதலில் அது என்ன என்று நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
பிறகு, அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்குங்கள். உழைக்கத் தொடங்குங்கள். உங்களால் முடியாது என்று இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. அப்படி, உங்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும், உங்களுடைய வளர்ச்சியிலும் ஓர் அண்ணனாகக் கூட இருந்து நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கான உத்தரவாதத்தைத் தரவே உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். இந்தச் சிலையைத் திறக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் பொன்முடி அவர்களுக்கும், மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் அவர்களுக்கும், நாமக்கல் கவிஞருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.விழாவில் உதயநிதி
இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும், இதில் கலந்துகொண்டவர்களுக்கும் என்னுடைய அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து விடைபெறுகிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான், உங்களுடைய அன்பு சகோதரராகத்தான் நான் எப்போதுமே இருப்பேன். சிலை திறப்பதற்காக மட்டும் என்னை இங்கே கூப்பிடவில்லை. பல்வேறு கோரிக்கைகளையும் வைத்திருக்கிறார்கள். அவற்றையும் விரைவில் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்" என்றார்.
http://dlvr.it/SkLWcV
http://dlvr.it/SkLWcV
Friday, 3 March 2023
மேற்குவங்கம்: இடைத்தேர்தலில் காங்கிரஸ் கொடுத்த ஷாக்... மம்தா அதிரடியால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி!
மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் சர்திகி தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இது மம்தா பானர்ஜிக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ``சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் இடைத்தேர்தலில் பாஜக-வுடன் மறைமுகக் கூட்டணி வைத்திருந்தன. இப்போது பொருத்தமற்ற கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ், எப்படி பாஜக-வை எதிர்த்து போட்டியிடும். இடதுசாரிக் கட்சிகள் எப்படி பாஜக-வை எதிர்த்து போட்டியிடும். பாஜக-வுக்கு எதிரானவர்கள் என்று எப்படி காங்கிரஸும் இடதுசாரிகளும் கூறிக்கொள்ள முடியும்?
இடைத்தேர்தலில் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் மதவாதத்தைப் பயன்படுத்தின. பாஜக வெளிப்படையாகப் பயன்படுத்தியது. காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் பாஜக-வைவிட அதிக அளவில் மதவாதத்தைப் பயன்படுத்தின. சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளின் பேச்சைக் கேட்கக் கூடாது. பாஜக-வுடன் இணைந்து செயல்படுபவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது என்பதற்கு இது ஒரு பாடம். 2024-ம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களுடன்தான் கூட்டணி வைக்கும்.
வேறு எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். மக்கள் ஆதரவுடன் போட்டியிடுவோம். பாஜக-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். பாஜக, காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளை எதிர்த்து போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் போதும்” என்று தெரிவித்தார். 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மம்தா பானர்ஜி ஒன்று சேர்க்க முயன்றார். ஆனால் அது முடியாமல்போனது. மேற்கு வங்கத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றது.மம்தா பானர்ஜி
இதையடுத்து இருப்பதையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக மேற்கு வங்கத்தில் மட்டுமே மம்தா பானர்ஜி அதிக கவனம் செலுத்திவருகிறார். கோவாவில் சில காங்கிரஸ் தலைவர்களைத் தனது கட்சிக்கு இழுத்து, அங்கு தனது கட்சியை விரிவுபடுத்த மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சி பலனலிக்கவில்லை. இதே போன்று வடகிழக்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு அங்கு தனது கட்சியை மம்தா பானர்ஜி வளர்க்க முயன்றார். ஆனால் தற்போது வந்திருக்கும் தேர்தல் முடிவுகள் மம்தா பானர்ஜிக்கு எதிராகவே அமைந்திருக்கின்றன.
எதிர்க்கட்சிகளை கூட்டணி சேர்த்து பிரதமராகிவிடலாம் என்று மம்தா பானர்ஜி கணக்கு போட்டுப் பார்த்தார். ஆனால், அந்தப் பதவிக்கு ஏற்கெனவே நிதிஷ் குமார், அர்விந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் ஆகியோரும் போட்டியில் இருக்கின்றனர். தற்போது தனித்துப்போட்டியிடுவேன் என்று மம்தா பானர்ஜி அறிவித்திருப்பதால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SkHhSl
http://dlvr.it/SkHhSl
``கும்மிடிப்பூண்டியைத் தாண்டாத ஸ்டாலின் நேஷனல் லீடரா... அது பகல் கனவு" - அண்ணாமலை பேச்சு
பா.ஜ.க-வின் சக்திகேந்திர பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று விழுப்புரத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தப் பகுதிகளில் பா.ஜ.க மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்தகட்டத்துக்கு பா.ஜ.க சென்றிருக்கிறது. குறிப்பாக, உள்கட்டமைப்புகளை வைத்து இங்கு அரசியல் நடப்பதே கிடையாது. சாதியைச் சார்ந்துதான் இங்கு அரசியலே நடந்திருக்கிறது. அதை பா.ஜ.க உடைத்துக்கொண்டிருக்கிறது. மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளும் வந்துகொண்டிருக்கின்றன.திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா - தேர்தல் முடிவுகள்
இந்த மூன்று மாநிலங்களிலும் அரசியலில் நிரந்தரமாக யாரும் ஜெயிக்க முடியாது. ஒரு குழப்பமான தேர்தல் காலம் அது. அதை பா.ஜ.க உடைத்திருக்கிறது என்பதுதான் மக்கள் நமக்குக் கொடுத்திருக்கும் முதல் செய்தி. 1947 - 2014 வரை இந்தியப் பிரதமர்களாக இருந்த அனைவரும் சேர்ந்து எத்தனை முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றார்களோ... அதைவிட அதிகமாக கடந்த ஒன்படு வருடங்களில் மோடி அவர்கள் அந்த பகுதிகளுக்குச் சென்றிருக்கிறார்.அண்ணாமலை - விழுப்புரம் ``அராஜகம், அத்துமீறல், ஜனநாயகப் படுகொலை..!" - ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, எப்போதுமே தேர்தலின் தீர்ப்பு வந்த பிறகு மக்கள் கொடுத்திருக்கக்கூடிய செய்தியை நாம் தலைவணங்கி ஏற்க வேண்டும். அது நம் அரசியலில் மிக முக்கியமானது. அப்படித்தான் அனைத்துத் தேர்தல்களையும் பா.ஜ.க பார்க்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே இருக்கின்றன. ஏற்கெனவே சொன்னதுபோல 2024-தான் எங்களுக்கான தேர்தல்.
மேலும், 'இந்த இடைத்தேர்தல் பாஜக-வுக்கானது இல்லை. அதனால் நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை' என்பதைத் தெளிவாக முன்பே சொல்லியிருந்தோம். கூட்டணி தர்மத்தின்படி, எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்காக உயிரைக் கொடுத்து பாடுபட்டிருக்கிறோம். எனவே, வந்திருக்கும் முடிவை தலைவணங்கி ஏற்கிறோம். 2024 களம் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். இதுவரை 87% இடைத்தேர்தல் முடிவுகள்... தமிழகம் மற்றும் இந்திய அளவிலான அரசியல் வரலாற்றிலும் ஆளுங்கட்சியை நோக்கித்தான் போயிருக்கின்றன. 2024 தேர்தலை நாங்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த இடைத்தேர்தல் நிலவரத்தைப் பொறுத்தமட்டில், 'தி.மு.க அரசின் செயல்பாட்டை மக்கள் ஆராய்ந்து ஓட்டுப் போட்டிருக்கின்றனர்' என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன். அரசியலில், அதிகாரத்தில் இருக்கும் ஓர் ஆளுங்கட்சியை எதிர்க்கும்போது எந்த அளவுக்கு பலம் தேவைப்படுகிறது என்பதை இது உணர்த்தியிருக்கிறது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
தி.மு.க-மீது மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. 2024 வரை வேறெந்த இடைத்தேர்தலும் வரக் கூடாது. அனைத்து எம்.எல்.ஏ-க்களும் உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும். திருமாவளவன் அண்ணன், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியில் வருவதற்கு ஒரு காரணத்தைத் தேடுகிறார். அவர் ஒரு புது அரசியலை ஸ்டாலின் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயல்கிறார். கூட்டணியிலிருந்து வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வாருங்கள். வெளியில் வருவதற்குக்கூட தைரியம் இல்லாமல் பேசுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் சொல்வதெல்லாம்... சித்தாந்தத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பா.ஜ.க என்றும் தேசியத்தின் பக்கம்.
நரேந்திர மோடி அவர்களை எந்தக் கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு களத்தில் இருக்கிறதோ, அந்தக் கட்சியோடு பா.ஜ.க கூட்டணி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அண்ணன் திருமா அவர்கள், வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வரலாம். சாக்குப் போக்கு சொல்வது ஏன் எனத் தெரியவில்லை. திட்டுவதற்கெல்லாம் ஒரு கூட்டமா... அவர்களுடைய தோழர்களே ஒரு கடையை உடைத்துவிட்டு, மருத்துவமனையில் படுப்பதைப்போல் எல்லா கட்சிகளும் இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்.பா.ஜ.க வித்தியாசமான கட்சி. எங்களோடு வந்து பார்த்தால்தான் திருமா அண்ணனுக்குத் தெரியும். எப்போதும் அந்தப் பக்கமே நாற்காலியைப் போட்டு அமர்ந்திருப்பதால், பா.ஜ.க-வின் மகிமை சில நேரங்களில் அவருக்குத் தெரிவதில்லை. திருமாவளவன், அண்ணாமலை
நான், நேற்றுப் பேசியதைத்தான் நாளையும் பேசுவேன். ராணுவ வீரர்கள் எல்லையில் நிற்பது அத்துமீறுபவர்களைச் சுடுவதற்குத்தான். யார் வந்தாலும் எல்லையில் சுட்டு வீழ்த்த வேண்டும். அவர்களை உள்ளே விட்டுவிட்டால் அப்பாவி மக்களை குண்டு வைத்துக் கொல்வார்கள். பா.ஜ.க ஆட்சியில் அது நடக்காது. உதாரணமாக, காஷ்மீரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். அதுதான் எங்களுடைய அரசு. அந்த அரசின் ஒரு தொண்டனான இந்த அண்ணாமலை, அப்படித்தான் பேசுவான். இதற்கெல்லாம் திருமாவுக்கு பயமாக இருந்தால் என்ன பண்ண முடியும்... இவர்களுடைய அரசியல் இவ்வளவுதான். இதையெல்லாம் பார்ப்பதற்கு எங்களுக்கு நேரமும் இல்லை, காலமும் இல்லை.
தி.மு.க கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள். வரும் காலங்களில் பா.ஜ.க இன்னும் அதிகமாக உழைக்கும். அ.தி.மு.க கூட்டணி பலமாகத்தான் இருக்கிறது. இடைத்தேர்தல் முடிவை வைத்து எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது. பட்டியல் சமூக மக்கள் பா.ஜ.க பக்கம் வர ஆரம்பித்துவிட்டதால், திருமா அவர்களுக்குக் கோபம். தடா பெரியசாமியுடன் முதலில் திருமா விவாதிக்கட்டும். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இணைவது அந்தக் கட்சிக்கான முடிவு. கூட்டணியில் இருக்கும் நாங்கள் அதைப் பற்றிச் சொல்ல முடியாது. தேசியக்கட்சி என்றால் இத்தனை இடங்களில் தேர்தலில் நின்றிருக்க வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.மோடி - ஸ்டாலின்
அரவிந்த் கெஜ்ரிவால்கூட, சரியோ தவறோ... வேறு மாநிலங்களின் தேர்தலில் நின்று பார்த்துவிட்டு, டெல்லியோடு இப்போது ஒதுங்குகிறார். ஆனால், "நான் ஏற்கெனவே தேசிய அரசியலில் வந்து விட்டேன்" என்று சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கும்மிடிப்பூண்டியைத் தாண்டாதவர்... எப்போது தேசிய அரசியலில் வந்தீர்கள்... மம்தாவின் பதவியேற்பு விழாவுக்குச் சென்று ஒரு முறை பேசிவிட்டால் தேசிய அரசியலா... எனவே, தமிழகத்திலிருந்து யாராவது தேசிய அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால் அது பகல் கனவு. தி.மு.க., மற்ற மாநிலங்களில் தனது கிளைகளைத் தொடங்கி, அங்கு நடைபெறும் தேர்தலில் 1% ஓட்டையாவது வாங்கிவிட்டு, 'தேசிய அரசியலில் வந்துவிட்டோம்' என்று சொல்லட்டும்" என்றார்.ஈரோடு கிழக்கு: ``எடப்பாடியின் தலைமைக்கு மக்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை!" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
http://dlvr.it/SkHhD9
http://dlvr.it/SkHhD9
Thursday, 2 March 2023
கடல் அலைக்கும் முகம் உண்டா? ஒரு போட்டோவுக்காக 12 மணிநேரத்தை செலவிட்ட லண்டன் கலைஞர்!
ஒரு நிகழ்வையோ, நபரையோ படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புகைப்பட கலைஞர்கள் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள் வார்த்தைகளில் எளிதாக சொல்லிவிட முடியாது. குறிப்பாக வன விலங்குகளை, இயற்கை நிகழ்வுகள் அல்லது இயற்கையின் அழகை போட்டோவாக எடுப்பது சற்று சவால் நிறைந்த பணியாகவே இருக்கும்.
இதற்காக மணிக்கணக்கில் காத்திருப்பதும் முக்கியத்துவமானதாக இருக்கும். ஏனெனில் தக்க சமயம் வரும் வரை பொறுமையுடன் காத்திருந்து அதனை படம் பிடித்து சாதித்தும் காட்டுவார்கள். அந்த வகையில் இயற்கையின் ஓர் அங்கமான கடல் அலைகளை போட்டோ எடுக்க லண்டனை சேர்ந்த போட்டோகிராஃபர் ஒருவர் கிட்டத்தட்ட 12 மணிநேரம் காத்திருந்தது தெரிய வந்திருக்கிறது.
வெறும் கடல் அலைகளை எடுப்பதற்காக எதற்கு இத்தனை மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால், அந்த அதனை வெறும் கடல் அலையாக மட்டும் எடுக்காமல் அலைகள் பொங்கியெழுந்து தணியும் போது வருவதை போட்டோவாக பதிவு செய்திருக்கிறார் இயன் ஸ்ப்ரோட்.
இங்கிலாந்தின் சண்டெர்லேண்ட் பகுதியில் உள்ள கடற்கரையின் ரோகர் பையர் கலங்கரை விளக்கத்தில் கடல் அலைகள் சீராக பாய்ந்து வந்து செல்வதைதான் துல்லியமாக படம் பிடித்திருக்கிறார் இயன் ஸ்ப்ரோட். அதன்படி கடல் அலைகள் கலங்கரை விளக்கத்தின் உச்சி வரை பட்டு தெறித்து விழும் போது முகத்தோற்றம் போன்ற அமைப்புடன் இருப்பதைதான் இயன் போட்டோ எடுத்திருக்கிறார்கள்.
View this post on Instagram
A post shared by Ian Sproat (@mje_photography_ne)
இதற்கு 12 மணிநேரம் காத்திருந்து 4,000 போட்டோக்களை எடுத்து அந்த முகத் தோற்றம் கொண்ட அலைகளை பதிவு செய்திருக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கும் இயன், “அலைகளில் முகங்கள். இது தண்ணீரின் கடவுளாகவும் இருக்கலாம் அல்லது நம் அன்புக்குரிய ராணி எலிசபெத்தாகவும் இருக்கலாம்” என கேப்ஷனிட்டுள்ளார்.
இயனின் இந்த முகத்தோற்றம் கொண்ட கடல் அலைகளின் போட்டோக்களை கண்ட இணைய வாசிகள் கமென்ட் செக்ஷனில் படையெடுத்து தத்தம் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அதில் சிலர் நம்பவே முடியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்கிறது என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள். அதேவேளையில், கண்டிப்பாக எடிட் செய்யப்பட்ட போட்டோவாக இருக்கும் என்றும் கமென்ட் செய்திருக்கிறார்கள்.
http://dlvr.it/SkDbyb
http://dlvr.it/SkDbyb
Wednesday, 1 March 2023
”உணவு உற்பத்தியில் மாற்றங்களைச் செய்யுங்கள்” - பஞ்சத்தை சமாளிக்க வடகொரிய அதிபர் ஆலோசனை!
வடகொரியாவின் உணவுப் பஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன், முதல்முறையாக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியா, மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது. காரணம், அந்த நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்றே செய்திகள் வெளியாகிறது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் மட்டும் 70க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.
உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில்கூட 4 ஏவுகணை சோதனைகளைச் சோதித்துப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், வடகொரியாவில் தற்போது கடும் உணவுப் பஞ்சம் நிலவி வருவதாகவும், அதைக் கடுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. உணவுப் பஞ்சத்தால் அங்குள்ள மக்கள் பலர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இதனை அந்த நாட்டு அரசு மறுத்துள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது. வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்கு அதிகம் செலவிடுகிறது. பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, வடகொரியா உணவுப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உணவுப் பஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவைக் கூட்டினார்.
இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், விவசாய முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விவசாயம் குறித்து விவாதிக்க மட்டுமே கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உணவு உற்பத்தியில் அடிப்படை மாற்றங்களைச் செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டில்அரசின் முழு கவனம் தானியங்கள் உற்பத்தியில் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் நாட்டில் உணவுப் பஞ்சத்தின் நிலை மிகமோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
http://dlvr.it/Sk9Xgz
http://dlvr.it/Sk9Xgz