வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன், தன்னுடைய ரசிகர் ஒருவரை தலையிலேயே 3 முறை ஓங்கி அடித்துள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இங்கிலாந்து அணியானது வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டியை தன்னுடைய அபாரமான பந்துவீச்சின் உதவியால் காப்பாற்றி கொடுத்தார் ஷாகிப் அல் ஹசன். 3ஆவது போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷாகிப், வங்கதேச அணி ஒயிட்வாஸ் ஆவதை தடுத்து நிறுத்தி சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்.
6000 ரன்கள்+300 விக்கெட்டுகள் எடுத்து சாதனை!
மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதற்கு பிறகு உலக கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 6000 ரன்கள் அடித்து, 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3ஆவது சர்வதேச வீரர் மற்றும் முதல் வங்கதேச வீரர் என்ற இமாலய சாதனையை படைத்து அசத்தினார் ஷாகிப். ஷாகித் அப்ரிடி மற்றும் சனத் ஜெயசூர்யா என்ற ஜாம்பவான் வீரர்களுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய 3ஆவது வீரர் ஷகிப் அல் ஹசன் தான். அதே போல் சக கிரிக்கெட் வீரர்களில் இதை எட்டிய ஒரே வீரர் ஷாகிப் தான், 200+ விக்கெட்டுகளுடன் மிட்சல் ஸ்டார்க் அடுத்த இடத்தில் இருக்கிறார்.
டி20 கேப்டனாக மொஹமதுல்லாவை சமன் செய்த ஷாகிப்!
ஒருநாள் தொடருக்கு பிறகு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டு விளையாடியது வங்கதேச அணி. டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ஷாகிப் அல் ஹசன், பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய வங்கதேச அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு வங்கதேச அணியின் டி20 வெற்றி கேப்டனாக பார்க்கப்படும் மொஹமதுல்லாவின் வெற்றியை சரி செய்துள்ளார் ஷாகிப் அல்ஹசன்.
கோபத்தின் உச்சியில் ரசிகரின் தலையில் ஓங்கி அடித்த ஷாகிப்!
இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிக்கு இடையேயான முதல் டி20 போட்டி முடிந்து சுமார் மூன்று மணி நேரம் கழித்து, வங்கதேச கேப்டன் ஷாகிப் சில வணிக விளம்பரங்களில் நடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த ஏராளமான ரசிகர்கள் ஷாகிப் அல் ஹசனை சூழ்ந்துகொண்டனர். அந்த கூட்டத்தின் இடையே சிக்கிக்கொண்ட ஷாகிப், பாதுகாப்பு வீரர்களுக்கிடையே இருந்தபோதிலும், ரசிகர்களிடம் நெரிசலில் இருந்து விலகி இருப்பது கடினமாக ஒன்றாகவே இருந்தது.
அப்போது அவர் நெரிசலில் இருந்து அவருடைய காருக்குள் ஏறுவதற்கு ஒருவழியாக செல்லும் போது, ரசிகர்களில் ஒருவர் மூத்த ஆல்ரவுண்டரின் தலையில் இருந்த தொப்பியை எடுத்துகொண்டார். அப்போது கோபப்பட்ட ஷாகிப், அந்த தொப்பியை அந்த ரசிகரின் கைகளில் இருந்து பிடிங்கி, அதே தொப்பியால் ஓங்கி மூன்று முறை தலையில் அடித்துவிட்டு கோபத்துடன், காருக்குள் சென்று ஏறினார். ஏற்கனவே பல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் ஷாகிப் அல் ஹசன், தற்போது விசயத்தாலும் வைரலாகி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Shakib Al Hasan Loses Cool, Hits Fan #shakibalhasan ,#bangladeshi ,#fan, pic.twitter.com/YYrbgbJxgW— Mahranikhan (@Mahrani90809546) March 11, 2023
ஐசிசி பேன் செய்தது முதல், இதுவரை ஷாகிப் சிக்கிய சர்ச்சைகள்!
வங்கதேசத்தின் மூத்த வீரரான ஷாகிப் அல் ஹசன், உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக இடம்பிடித்த சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தாலும், மற்றவர்களிடம் அவர் காட்டும் மோசமான அணுகுமுறைக்காக பலமுறை விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக பல சர்ச்சைகளில் முன்னணியில் இருந்த ஷாகிப், 2023ஆம் ஆண்டின் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் போது, லெக் அம்பயரிடம் ஒயிட் கொடுக்காததிற்காக ஏய் ஏய் என கத்திக்கொண்டே வந்து சண்டையிட்டதற்கு சார்ஜ் செய்யப்பட்டார். அதேபோல் 2021-ல், டாக்கா பிரீமியர் லீக்கின் போது, அவுட் கேட்டு கொடுக்காததால் நடுவர் மீது கோபமடைந்த ஷாகிப், கோபத்தில் ஸ்டம்பை உதைத்து தரையில் அடித்து நொறுக்கினார். அது பலபேரால் பலவிதாமன விமர்சனங்களுக்கு அவரை தள்ளியது.
அதற்கும் மேலாக 2019 ஆம் ஆண்டில், தனக்கு வந்த ஊழல் விவகாரத்தை வெளியே சொல்லாததிற்காக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் உத்தரவின் பேரில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2 வருட காலம் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டார், ஷாகிப் அல் ஹசன்.
http://dlvr.it/Sklq1b
http://dlvr.it/Sklq1b