Saturday, 26 August 2023
Friday, 25 August 2023
தேர்தல் முறைகேடு வழக்கு; நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர்!
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அதன் பிறகு 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனிடம் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் முறைகேடுகள் செய்து, தேர்தல் வெற்றியை ஜோ பைடன் அபகரித்துக்கொண்டார் என ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கிடையில், 2021 ஜனவரி 6-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குச் சான்றளிக்கும் நிகழ்ச்சி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.டொனால்டு ட்ரம்ப்
ஆனால், அந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல், ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாகவும், ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாகவும் ட்ரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் கலவரம் தொடர்பான வழக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்திலும், ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கு ஜார்ஜியா நீதிமன்றத்திலும் நடந்தது.
இரண்டு நீதிமன்றங்களும் டொனால்டு ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தன. தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் மேலும் 17 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப் உள்ளிட்ட 17 பேரும் வெள்ளிக்கிழமைக்குள் நீதிமன்றத்தில் சரணடையவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், மிஸ்டி ஹாம்ப்டன், டேவிட் ஷாஃபர், கேத்தி லாதம், ரே ஸ்மித், கென்னத் செஸ்ப்ரோ, ஜான் ஈஸ்ட்மேன், ஸ்காட் ஹால் உட்பட பல்வேறு நபர்கள் வெவ்வேறு நாள்களில் சரணடைந்தனர்.ருடால்ப் கியுலியானி
இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகளுக்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடால்ப் கியுலியானி மீது, பொய்யான அறிக்கைகளை வழங்குதல், பொய் சாட்சியம் கோருதல், மோசடியான ஆவணங்களை உருவாக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று அட்லான்ட்டா காவல் நிலையத்தில் ருடால்ப் கியுலியானி சரணடைந்தார். இவர் 1,50,000 அமெரிக்க டாலர் பிணையாகச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தத் தொகையை அவர் வழங்கிய பிறகு பெயிலில் விடுவிக்கப்பட்டார். இது குறித்துப் பேசிய ருடால்ப் கியுலியானி, ``இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
ஏனென்றால், இந்த வழக்கு எங்கள் வாழ்க்கை முறைக்கான போராட்டம். என்மீது மட்டுமல்ல, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதும் வைத்த இந்தக் குற்றச்சாட்டு ஒரு கேலிக்குரியது. எங்கள்மீது தொடரப்பட்ட தாக்குதல் என்றே கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப் `விரைவில் ஆஜராகுவேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டால் குறைந்தது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY'டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவர்' - தீர்ப்பு வழங்கிய இந்திய வம்சாவளி நீதிபதி... யார் இந்த உபாத்யாயா?!
http://dlvr.it/Sv8G8L
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY'டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவர்' - தீர்ப்பு வழங்கிய இந்திய வம்சாவளி நீதிபதி... யார் இந்த உபாத்யாயா?!
http://dlvr.it/Sv8G8L
Thursday, 24 August 2023
``நிலவில் `சந்திரயான்-3' ; பூமியில் எடப்பாடியாரின் மாநாடு சாதனை..!" - ஆர்.பி.உதயகுமார்
``கச்சத்தீவை தி.மு.க அரசு தாரைவார்த்துக் கொடுத்ததை மாற்றி எழுத, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட ஸ்டாலின் முயல்கிறார்'' என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார். நலத்திட்ட உதவி
எடப்பாடி பழனிசாமிக்கு `புரட்சித் தமிழர்' விருது வழங்கியதை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தமிழகத்தில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை எடப்பாடியார் செயல்படுத்தியதால், `புரட்சித் தமிழர்' பட்டத்தை மதுரை மக்கள் சூட்டினார்கள். ஆனால், அவர் என்ன சாதனை செய்தார் என்று சில ஞானசூனியங்கள் பேசிவருகிறார்கள்.
அது மட்டுமல்ல, மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உலக பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலகமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், தமிழ்நாட்டிலும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழைக் கட்டாயமாக பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் கொண்டுவர சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.மதுரை அ.தி.மு.க மாநாடு
அதைத் தொடர்ந்து 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தீர்மானங்கள் தி.மு.க அரசைக் கண்டித்தும், ஸ்டாலினைக் கண்டித்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் 16-வதாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கச்சத்தீவை தி.மு.க அரசு தாரைவார்த்துக் கொடுத்ததை மாற்றி எழுத பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட ஸ்டாலின் முயல்கிறார். கச்சத்தீவு பிரச்னையில்கூட ஜெயலலிதா இருக்கும்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் வருவாய்த்துறையும் இணைக்கப்பட்டது. கச்சத்தீவை மீண்டும் மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர தொடர்ந்து களப்பணி ஆற்றிவரும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து இதுவரை யாரும் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் அமைக்கும் வியூகத்தின்படி செயல்பட்டு எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்க சூளுரை ஏற்கப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் புரிந்தும் புரியாததுபோல் ஊடக விவாதங்களில் சிலர் பேசி வருவதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை நகைச்சுவையாகத்தான் பார்க்கிறார்கள்.நலத்திட்ட உதவி
தமிழகம் மென்பொருள் உற்பத்தியில் முதலிடம் வந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், தமிழகத்தில் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியும் தமிழகத்தில் கடன் சுமை முதலிடத்தில் இருக்கிறது. `ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்வார்' என்று உதயநிதி கூறுகிறார். `சந்திரயான்-3' நிலவில் சாதனை படைத்திருக்கிறது. எடப்பாடியார் தலைமையிலான மாநாடு பூமியில் சாதனை படைத்திருக்கிறது" என்றார்.
Junior vikatan 1
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxs``அரசு விழாக்களில் இன்பநிதி; தமிழகம் கருணாநிதியின் குடும்பச் சொத்தா?!” - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
http://dlvr.it/Sv5c2t
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxs``அரசு விழாக்களில் இன்பநிதி; தமிழகம் கருணாநிதியின் குடும்பச் சொத்தா?!” - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
http://dlvr.it/Sv5c2t
Wednesday, 23 August 2023
வீணாக்கப்பட்ட உணவு: அதிமுக விளக்கம் -Madras Day Special - பிரகாஷ்ராஜ் மீது வழக்கு - SIP: லாப உத்தி
வீணாக்கப்பட்ட உணவு: அதிமுக விளக்கம்!
அதிமுக மாநாட்டில் வீணான உணவு
மதுரை அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உணவு வழங்கும் விதமாக 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் இணைந்து 10 லட்சம் பேருக்கு சமையல் செய்தனர். இதற்காக 100 டன் அரிசி வரவழைக்கப்பட்டது. லெமன் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், பிரிஞ்சி சாதம் என வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மாநாட்டில் தொண்டர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகள் டன் கணக்கில் வீணாக கீழே கொட்டப்பட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இது குறித்து அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கான உணவு தொடர்பான விஷயங்களை பொறுப்பேற்று கவனித்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அளித்த விளக்கத்தை படிக்க இங்கே க்ளிக் செய்க...
Madras Day Special: மெட்ராஸுக்கு ஐஸ் வந்த கதை தெரியுமா?
ஐஸ் ஹவுஸ்
ஐஸ், ஒரு காலத்தில் அதிகாரத்தின் குறியீடு. மற்றவர்களெல்லாம் ஆசைப்பட்டாலும் கிடைக்காத பொருள். ஐஸ், இந்தியாவுக்கு வந்ததும், அது எல்லோரும் பயன்படுத்தும் பொருளாக மாறியதும் இரு நூற்றாண்டு வரலாறு.
ஐஸின் வரலாறு சென்னையின் வரலாற்றோடு பிணைந்திருக்கிறது.
அந்த வரலாற்றைத் தினந்தோறும் நினைவுகூர்ந்து கொண்டேயிருக்கிறது சென்னை, மெரினா கடற்கரையை ஒட்டியிருக்கும் ஐஸ் ஹவுஸ்.
ஐஸ் ஹவுஸ் என்பது வீடா? ஊரா? தெருவா?
தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
Chandrayaan-3 : கிண்டல் புகார்; நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!
பிரகாஷ் ராஜ்
பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவர் டீ ஆற்றுவதுபோன்ற ஒருபடத்தைப் பதிவிட்டு, ''சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவிலிருந்து எடுத்த முதல் படம்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து சமூக வலைதளவாசிகள் பலரும், இந்தப் பதிவுக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
டீ, வடைக்கு 6 மாதம் பாக்கிவைத்த போலீஸார்; முதல்வருக்குப் பறந்த புகார்!
டீ கடை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் இருக்கிறது கரியாலூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்துக்கு எதிரே செல்வம் என்பவர் சிறிய அளவில் டீக்கடை வைத்து நடத்திவருகிறார்.
அந்தக் கடையில் இருந்துதான் இந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸார் தினமும் டீயும், வடையும் வரவழைத்து சாப்பிட்டிருக்கின்றனர். ஆனால், அதற்கான தொகையை செலுத்தாமல் கடன் வைத்தே அன்றாடம் டீயையும், வடையையும் சாப்பிட்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
சனிதசை என்ன செய்யும்..? - பரிகாரங்கள்!
ஶ்ரீசனிபகவான்
ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகங்களுக்கான தசா காலங்கள் நடக்கும்போது, குறிப்பிட்ட பலன்கள் விளையும் என்பது ஜோதிடக் கிரந்தங்களின் கூற்று. அந்த வகையில், சனி பகவானின் தசா காலம் 19 வருடங்கள்.
ஜாதகத்தில் குறிப்பிட்ட ஜாதகரின் பிறப்பு நேரம், தசா கால இருப்பு விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இன்று வெளியான சக்தி விகடன் இதழில் இடம்பெற்றுள்ள இது குறித்த கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க...
எஸ்.ஐ.பி முதலீடு... லாபத்துக்கான உத்தி!
எஸ்.ஐ.பி
மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடு செய்யும் புதிய முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்கெனவே மொத்தமாக முதலீடு செய்தவர்கள் எஸ்.ஐ.பி முறையில் சரியாக முதலீடு செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டால் அவர்களின் லாபம் நிச்சயம் அதிகரிக்கும்.
எனவே எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்கும்போது அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன..?
படிக்க இங்கே க்ளிக் செய்க...
தலைச்சுற்றல், வாந்தி ... அவ்வளவு ஆபத்தானதா நிலக்கடலை?
நிலக்கடலை
சுடச்சுட வறுத்த கடலையை, மிகச்சன்னமாகச் சுருட்டிய காகிதப்பொட்டலத்தில் வண்டிக்காரர் கட்டித்தர, அதிலிருந்து ஒவ்வொரு கடலையாக சுவைத்தபடியே அரட்டையடிக் கச்சேரி நடத்துவதிலிருக்கும் சுகமே... தனிதான்!
இதற்கிடையே, `நிலக்கடலையா... பார்த்துச் சாப்பிடுங்க... 12 கிராமுக்கு மேல சாப்பிடக்கூடாது... தலைச்சுத்தல் வரும்' என்பது போன்ற எச்சரிக்கைகள் எட்டிப்பார்ப்பது, நிலக்கடலையின் மீது கொஞ்சம் பயத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
விஷ்ணு விஷால் மிஸ் செய்த 'நான் மகான் அல்ல'!
விஷ்ணு விஷால், கார்த்திக்- காஜல் அகர்வால்
'நான் மகான் அல்ல' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் படம் தொடர்பாக பல்வேறு பதிவினை வெளியிட்டிருந்தனர்.
அதில் ஒரு பகிர்வை பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால் 'நான் மகன் அல்ல' படம் எனக்கு இரண்டாவது படமாக அமைய வேண்டிய படம் என்று பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
அப்பதிவை படிக்க இங்கே க்ளிக் செய்க...
http://dlvr.it/Sv2zlG
http://dlvr.it/Sv2zlG
Tuesday, 22 August 2023
`திருமா போராட்டம் முதல் டிடிவி பேட்டி வரை' முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு | News In Photos
திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 30-வது நிறுவன நாள் மற்றும் விவசாயிகள் தின விழாவில், வாழை தொடர்பாக சிறப்பாகப் பணியாற்றிய 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், பிரின்ட் மீடியா பிரிவில் வாழை தொடர்பாக சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக பசுமை விகடனுக்கு விருது வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், தென்முக வெள்ளோடு ராசா சுவாமி நல்லமங்கையம்மன் கோயில் தேரோட்டம்ஈரோடு கனி ராவுத்தர்குளம் ஓங்காளியம்மன் கோயில் பொருள்களைத் திருடிய நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநங்கை ஆமிஷா என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னையிலுள்ள தாமஸ் மன்றோ சிலை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது. தேனியில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக வளாகங்களின் உரிமையாளர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ் வளர்ச்சி அரசு செயலாளர் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்தஞ்சையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் அ.தி.மு.க மாநாட்டையும் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்தார். பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்துவைத்தார்.மதுரையில் நடைபெற்று முடிந்த அ.தி.மு.க மாநாட்டில் மீதமுள்ள உணவை கீழே கொட்டியிருக்கின்றனர்புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் மீண்டும் வேலை வேண்டி தலைமை அலுவலகத்தின் வாயில் மீது ஏறி தற்கொலை முயற்சி போராட்ட த்தில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி: நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகளைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்பினார்.மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றதுவிருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வேண்டி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி.கன்னியாகுமரி ஈசாந்திமங்கலம் அண்ணா காலனி கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்ல பாதை அமைத்து தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முகத்தில் கரி பூசி, பட்டை நாமம் அடித்து மனு அளிக்க வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
http://dlvr.it/Sv0GV6
http://dlvr.it/Sv0GV6
Monday, 21 August 2023
``அப்போ இந்தி எதிர்ப்பு... இப்போ நீட்; எப்போதும் மக்கள் ஏமாற மாட்டார்கள்!" - வானதி சீனிவாசன் காட்டம்
நீட் தேர்வு காரணமாக அரியலூர் அனிதா முதல் சென்னை ஜெகதீஸ்வரன் வரை பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதனால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க அறிவித்து, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும், இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணியினரும் கலந்திருக்கின்றனர்.நீட் எதிர்ப்பு போராட்டம்
இந்த நிலையில், தி.மு,க-வின் நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவார்கள் என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க-வின் தேசிய மகளிர் அணித்தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். அதில், "மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது தி.மு.க. மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், மருத்துவக் கல்வியின் தரம் குறைந்து விடக்கூடாது.
அதே நேரத்தில், திறமையான மாணவர்களின் மருத்துவர் கனவும் தகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, நீட் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2017 முதல் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து வருகிறது. ஆண்டுக்கு தமிழக மாணவர்களின் பங்கேற்பும், தேர்ச்சியும் அதிகரித்து வருகிறது. ஆனாலும், இந்தி வெறுப்பு, திராவிட இனவாதம் போல, நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக தி.மு.க பயன்படுத்தி வருகிறது.நீட் எதிர்ப்பு போராட்டம்
நீட் தேர்வுக்காக தமிழக அரசே பயிற்சி மையங்களை நடத்தி, அதற்கு பெரும் வெற்றி கிடைத்து வந்த நிலையில்தான், 2021-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, "தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்திடுவோம். அதற்கான ரகசியம் எனக்கு தெரியும்" என்றார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை, உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் பொய்யான வாக்குறுதி அளித்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு இருக்காது என தி.மு.க-வினர் பிரசாரம் செய்கின்றனர். இதனால், நீட் தேர்வு இருக்காது, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடக்கும் என ஒரு பகுதி மாணவர்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். இன்னொரு பெரும் பகுதி மாணவர்கள் நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற குழப்ப மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.நீட் எதிர்ப்பு போராட்டம்
இதனால் நீட் தேர்வை உறுதியுடன் எழுத முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால்தான் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு சில மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு சுமை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நீட் தேர்வு நடந்தபோது, 12-ம் வகுப்பையே பயிற்சி மையங்கள் போல, ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு தனியார் பள்ளிகள் நடத்தின. நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோர் எம்.பி.பி.எஸ்-ல் சேர்ந்தனர்.
தனியார் பயிற்சி மைய பிரச்னை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்து மாணவர் சேர்க்கை நடக்கும்போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அதன் வடிவங்கள் தான் மாறியுள்ளன. அரசு இதில் அதிக கவனம் செலுத்தும் தனியார் பயிற்சி மைய பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக இதற்கு தீர்வு காண்பதில் தி.மு.க அரசு அக்கறை காட்டவில்லை. நீட் தேர்வால் இட ஒதுக்கீடு முறையில் எந்த மாற்றமும் இல்லை.நீட் எதிர்ப்பு போராட்டம்
தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. மத்திய பா.ஜ.க அரசின் வழிகாட்டுதலில், அ.தி.மு.க அரசு கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனவே, நீட் தேர்வால் சமூக நீதிக்கும் பாதிப்பு இல்லை. மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்த பிறகு, 'ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதனால் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், எம்.பி.பி.எஸ், எம்.டி., போன்ற இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையும் இரு மடங்காகியுள்ளது. தமிழகத்திற்கு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை மத்திய பா.ஜ.க அரசு வழங்கியுள்ளது. இதுதவிர 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய பா.ஜ.க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த இடங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.வானதி சீனிவாசன்
அவர்களில் இருந்து தகுதியான 10 ஆயிரம் பேரை தேர்வு செய்ய, நுழைவுத் தேர்வு தேவைப்படுகிறது. அகில இந்திய தொகுப்பு ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓ.பி.சி.) மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் 2021-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். எனவே, நீட் தேர்வால் சமூக நீதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. "இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்" என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அப்படியெனில், 2021-ல் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது அரசியல் மாற்றம் இல்லையா? 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும் என்பதெல்லாம் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினுக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் தெரியாதா? "தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதன் ரகசியம் எனக்கு தெரியும்" என்று உதயநிதி சொன்னதெல்லாம் மாணவர்களை, மக்களை ஏமாற்றும் நாடகமா?உதயநிதி, ஸ்டாலின்
"நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். இதிலிருந்து நீட் தேர்வை அரசியலாக்கி குளிர்காய நினைக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களை போராட்டத்திற்கு அழைப்பது, சமூக அமைதியை குலைக்கும் செயல். அமைச்சரே மக்களைத் தூண்டி விடுகிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி, பாடத்திட்டங்களை காலத்திற்கேற்ப மாற்றி அமைத்து, பள்ளிகளிலேயே பயிற்சி அளித்தால் நம் மாணவர்கள் சாதிப்பார்கள்.
ஆனால், நீட் தேர்வு குறித்த அச்சத்தை விதைத்து கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அரசியல் நடத்த ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில், அரசியலுக்காக நாட்டின் சொத்தான மாணவர்களின் எதிர்காலத்தோடு, அவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்.வானதி சீனிவாசன்
தி.மு.க தொடங்கப்பட்டபோது அதாவது அந்தக் கட்சியின் முதல் தலைமுறை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. இப்போது மூன்றாவது தலைமுறை நீட் எதிர்ப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பலிகடா ஆக்கினர். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஆனால் இந்த முறை தமிழக மாணவர்களும், தமிழக மக்களும் ஏமாற மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.``உதயநிதி காலத்தில் நீட் ஒழிந்தது என்கிற வரலாறு சரித்திரத்தில் இடம்பெறும்!" - துரைமுருகன் பேச்சு
http://dlvr.it/StxTnW
http://dlvr.it/StxTnW
Sunday, 20 August 2023
DMK: ``இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். ஏனென்றால்..!” - துரைமுருகன்| Live Updates
தொடங்கியது திமுக-வின் உண்ணாவிரத போராட்டம்!
திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும் ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எம்.பி தயாநிதிமாறன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்
சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவைத்து பேசிய துரைமுருகன், ``நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலரும் எதிர்க்கிறார்கள். ஆனால் ஒன்றிய மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு” என்றார்.
அதிமுக மாநாட்டை கொடியேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார். மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று காலை தொண்டர்கள் வரவேற்ப்புக்கு இடையே எடப்பாடி பழனிச்சாமி மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்து, 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டு நிகழ்வினை தொடக்கி வைத்தார்.
அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பினை அளித்தனர். அம்மா பேரவையை சேர்ந்த 4000 தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்த உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கொடியை ஏற்றி வைத்த போது ஹெலிகாப்டர் மூலம் கிட்டத்தட்ட ஒரு டன் ரோஜா மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடக்கும் அதிமுகவின் எழுச்சி மாநாடு என்பதால் இந்த மாநாட்டு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது
மதுரை அதிமுக மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள சாதனை விளக்க கண்காட்சி. #admk #madurai
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு. நிருபர் : சல்மான் மு. கார்த்தி
வீடியோ: ஈ. ஜெ.நந்தகுமார், என்.ஜி.மணிகண்டன்,ஆர்.எம்.முத்துராஜ்
அதிமுக மாநாடு: தயார் நிலையில் ஏற்பாடுகள்..!
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு:
அதிமுக எழுச்சி மாநாடு மதுரையில் பிரமாண்டமாக இன்று நடைபெற உள்ளது. இன்று காலை கட்சி கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடக்கி வைக்கிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிமுக அம்மா பேரவையின் சார்பில் 4 ஆயிரம் தொண்டர்கள் சீருடை அணிந்து எடப்பாடி பழனிசாமிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துகின்றனர். தொடர்ந்து மாநாட்டில் அதிமுக புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இசை கச்சேரி, மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது என பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
10 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன. காலையில் கொடியேற்றிய பிறகு, ஓய்வெடுக்கச் செல்லும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4.30 மணிக்கு மீண்டும் மேடைக்கு வருகிறார். மாலை 6 மணிக்கு தொண்டர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றுகிறார். மாநாடு காரணமாக வலையங்குளம் பகுதிக்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. மேலும், அதிமுக மாநாட்டை ஒட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக உண்ணாவிரத போராட்டம்!
கடந்த வாரத்தில் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி நீட் விலக்கு மசோதா குறித்து பேசும் போது, தான் ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார். இந்த கருத்து தமிழ்நாட்டில் சர்ச்சையாக வெடித்தது.
இதனை தொடர்ந்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி ஆகிய அணிகள் சார்பில், உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக போராட்டம் அறிவித்ததால், இந்த இரு நிகழ்வுகளும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. உதயநிதி ஸ்டாலின்
இதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் உண்ணாவிரத போராட்டங்கள் மாநில அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் பழங்காநத்தத்தில் உண்ணாவிரதம் இருக்க முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையில் இன்று அதிமுக மாநாடு நடப்பதால், திமுக உண்ணாவிரதம் ஆக.23-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/StvStP
http://dlvr.it/StvStP