Sunday, 22 October 2023
Saturday, 21 October 2023
ம.பி தேர்தல்: "காங்கிரஸ் துரோகம் செய்யுமென்று தெரிந்திருந்தால் நம்பியிருக்க மாட்டேன்"- அகிலேஷ் யாதவ்
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலைக் கருத்தில்கொண்டு, பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உட்பட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து `இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்திருக்கின்றன. முழுக்க முழுக்க லோக் சபா தேர்தலை முன்வைத்து மட்டுமே `இந்தியா’ கூட்டணி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. காரணம், மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போது தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு செய்துகொள்வோம் என்று கூட்டணியிலிருக்கும் எந்தக் கட்சியும் இதுவரை கூறியதில்லை.இந்தியா கூட்டணி
இவ்வாறிருக்கவே, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை நடத்தத் தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை காங்கிரஸ். காங்கிரஸைப்போலவே, `இந்தியா’ கூட்டணியிலிருக்கும் ஆம் ஆத்மி, சமாஜ்வாடி போன்ற கட்சிகள் மத்தியப் பிரதேசத்தில் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. இதில், சமஜ்வாடி சில தொகுதிகளில் காங்கிரஸுக்கு எதிராகவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.
இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் மத்தியப் பிரதேசத் தேர்தலில் தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாடி வெளியிட்டிருக்கும் நிலையில், `கங்கிராஸார் துரோகம் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களை நம்பியிருக்க மாட்டேன்' என்றும், `காங்கிரஸ் இவ்வாறு நடந்துகொண்டால், அவர்களுடன் யார் நிற்பார்கள்?' என்றும் சமாஜ்வாடித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்திருக்கிறார்.அகிலேஷ் யாதவ்
மத்தியப் பிரதேசத் தேர்தல் தொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், ``எங்களுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் `இந்தியா’ கூட்டணி இல்லை என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் தலைவர்களை நாங்கள் அனுப்பியிருக்க மாட்டோம். மாநிலத் தலைவருக்கு (மத்தியப் பிரதேச காங்கிரஸ்) இதில் அதிகாரமே இல்லை. மும்பை மற்றும் பாட்னாவில் நடந்த `இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் அவர் இல்லை. `இந்தியா’ கூட்டணி பற்றி அவருக்கு என்ன தெரியும்... காங்கிரஸிலிருக்கும் சிலர் பா.ஜ.க-வுடன் தொடர்பிலிருக்கின்றனர். மாநில அளவில் கூட்டணி இல்லை என்று தெரிந்திருந்தால், சமாஜ்வாடி தலைவர்களை திக்விஜய சிங்கிடம் அனுப்பியிருக்க மாட்டேன். அதோடு, காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களை நம்பியிருக்கவும் மாட்டேன்" என்றார்.
அதுமட்டுமல்லாமல், இன்றும் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், ``சீட் கொடுக்க விருப்பமில்லையென்றால் அதை முன்பே சொல்லியிருக்க வேண்டும். `இந்தியா’ கூட்டணி என்பது தேசிய அளவிலான தேர்தலுக்கு என்று இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. காங்கிரஸ் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால், அவர்களுடன் யார் நிற்பார்கள்... மனதில் குழப்பத்துடன் பா.ஜ.க-வுக்கு எதிராகப் போராடினால், நாங்கள் வெற்றிபெற மாட்டோம்" என்று கூறினார்.காங்கிரஸ்
அகிலேஷ் யாதவின் இத்தகைய கூற்றால், ``டெல்லியில் (மத்தியில்) நட்பு, மாநிலங்களில் சண்டை" என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் `இந்தியா’ கூட்டணியை இன்று விமர்சித்திருக்கிறார். இன்னொரு பக்கம், காங்கிரஸைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், ``அகிலேஷ் யாதவின் பேச்சை விட்டுவிடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
230 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்பதும், டிசம்பர் 3 அன்று மொத்தமாக ஐந்து மாநில முடிவுகளும் ஒன்றாக வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஐந்து மாநிலத் தேர்தல் எனும் அரையிறுதி ஆட்டம்!
http://dlvr.it/SxlFS8

Friday, 20 October 2023
சுட்டிக்காட்டிய விகடன்; சேலம் மாநகரக் காவல்துறையில், ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்!
சேலம் மாநகரக் காவல்துறைக்குக்கீழ் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருந்துவருகின்றன. இதில், மகளிர் காவல் நிலையமும் அடக்கம். இந்த நிலையில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பாளராக இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர் என்று இருந்தாலும், காவல் நிலையங்களில் நடக்கக்கூடிய நேரடி விஷயங்களையும், மறைமுக விஷயங்களையும் மாநகர காவல் ஆணையரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது நுண்ணறிவுப் பிரிவு எனும் ஐ.எஸ் `இன்டெலிஜென்ஸ் செக்ஷன்'தான். இந்தப் பிரிவு, மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் இயங்கிவருகிறது.சேலம் மாநகர் காவல்துறை - டிஜிபி
இந்த நுண்ணறிவுப் பிரிவை தமிழகமெங்குமுள்ள மாநகர காவல்துறையில் கொண்டு வந்ததற்கான காரணமே, ஒவ்வொரு காவல் நிலையத்திலுமிருந்து வரக்கூடிய தகவல்கள் சரியாக வருவதில்லை. குற்றச் சம்பவங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை, தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பிரிவு கொண்டுவரப்பட்டது.சீனிவாசன்
இதற்கென தனி உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்குக்கீழ் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஐ.எஸ் என்ற காவலர்கள் மஃப்டியில் இருந்துகொண்டு, தகவல்களைச் சேகரித்து அனுப்புவார்கள். இந்த நிலையில், சேலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கண்ட ஐ.எஸ் பிரிவில் இன்ஸ்பெக்டர் பதவி நிரப்பப்படாமல் இருந்துவந்தது. இது தொடர்பாக ஜூ.வி இணையத்தில், ``மூன்று ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி; என்ன சொல்கிறார்கள் உயரதிகாரிகள்?” என்கிற செய்தியை காவல்துறை உயரதிகாரிகளின் விளக்கங்களுடன் வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியின் எதிரொலியாக தற்போது ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி நிரப்பப்பட்டிருக்கிறது. இந்தப் பணியிடத்துக்கு சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். Exclusive: 3 ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி; என்ன சொல்கிறார்கள் உயரதிகாரிகள்?
http://dlvr.it/SxhnNl

Thursday, 19 October 2023
ஜெகத்ரட்சகன்: ``ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி தங்கம் பறிமுதல்!" - வருமான வரித்துறை தகவல்
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அவருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஹோட்டல் உட்பட அவருக்குத் தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீர் சோதனை மேற்கொண்டனர். சரியாக அக்டோபர் 5-ம் தேதி முதல் இந்த சோதனை, தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இதனை, ``பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியலுக்கு அளவேயில்லை" என்று முதல்வர் ஸ்டாலின் சாடியிருந்தார்.ஜெகத்ரட்சகன்
இந்த நிலையில், சோதனை தொடர்பான அறிக்கையை வருவமான வரித்துறை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``05.10.2023 அன்று, தொழில்சார் படிப்புகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை முதன்மையாக நடத்தும் இரு குழுமங்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த குழுக்கள் மதுபான ஆலைகள், மருந்து தயாரிப்புகள், மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல் போன்றவற்றை நடத்திவருகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 100 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக, கணக்கில் காட்டப்படாத ரூ.400 கோடி மதிப்பிலான ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தவறான தகவல்கள் அளித்து ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட குழுவால் நடத்தப்படும் மதுபான ஆலையில், ரூ.500 கோடிக்கு போலி கணக்கு காட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.வருவமான வரித்துறை அறிக்கை
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், அறங்காவலர்கள் தனிப்பட்ட செலவுகளுக்காகவோ அல்லது பல்வேறு வணிகங்களில் ஈடுபடுத்துவதற்காகவோ, அறக்கட்டளையிலிருந்து ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகை மடைமாற்றப்பட்டிருக்கிறது. இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கமும், ரூ.28 கோடி மதிப்பிலான தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. மொத்தமாக இதன் மதிப்பு ரூ.60 கோடி. மேலும், அடுத்தகட்ட விசாரணைகள் விசாரணைகள் நடைபெற்றுவருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
ஐ.டி ரெய்டு @ ஜெகத்ரட்சகன் - திமுக-வுக்குத் தொடரும் நெருக்கடி... பின்னணி என்ன?!
http://dlvr.it/SxfBQs

Wednesday, 18 October 2023
``பாஜக, ஒரே சித்தாந்தத்தால் இந்தியாவை ஆள துடிக்கிறது; அதை எதிர்த்துதான் INDIA போராடுகிறது!" - ராகுல்
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. 2018-ல் நடந்ததுபோலவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட ஐந்து மாநிலத் தேர்தலுக்கான பிரசாரங்களும் பல்வேறு வகைகளில் சூடுபிடித்திருக்கின்றன.பிரதமர் மோடி
இந்த நிலையில், மிசோரத்தில் இரண்டாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``மணிப்பூரில் தற்போதுள்ள சூழ்நிலை மத்திய அரசின் ஒரே சித்தாந்தம், ஒரே அமைப்பு என்ற அணுகுமுறையின் விபரீதம். மணிப்பூர்தான் ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டின் விளைவுக்கு உதாரணம். மிசோரம் மக்களின் மத அடித்தளம் மற்றும் மொழிகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தாக்கப்படுகின்றன. பா.ஜ.க, இந்தியாவை ஒரே சித்தாந்தம் ஒரு அமைப்பால் ஆள வேண்டும் எனத் துடிக்கிறது. அதைத்தான் எதிர்க்கட்சிகளின் `இந்தியா' கூட்டணியினரான நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம்.
டெல்லியிலிருந்து மிசோரம் ஆட்சி செய்யப்பட வேண்டுமா... மிசோரம் மக்கள்தான் அவர்களின் எதிர்காலத்துக்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் மக்கள் தங்களையும் தங்கள் மத மற்றும் சமூக நடைமுறைகளையும் வெளிப்படுத்தச் சுதந்திரமான சூழலில் இருக்க வேண்டும். அஸ்ஸாம் முதலமைச்சரும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் (NEDA) ஒருங்கிணைப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஆர்.எஸ்.எஸ் மிசோரத்துக்குள் நுழைவதற்கான கதவைத் திறக்க முயல்கிறார்.ராகுல் காந்தி
இது வடகிழக்கின் கலாசார அழிவுக்கு வழிவகுக்கும்... அது நுழைந்தால் மாநிலத்தின் கலாசாரங்கள் அழிக்கப்படும். மிசோரத்திலுள்ள MNF, ZPM ஆகிய இரண்டு மாநிலக் கட்சிகளும், இந்த மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வுக்கான நுழைவு புள்ளிகள். MNF நேரடியாக பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது, ZPM நேரடியாக பா.ஜ.க-வை எதிர்த்துப் போராடவில்லை. அனைத்து மதங்களும், அனைத்து கலாசாரங்களும், அனைத்து வரலாறுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா கூட்டணி நம்புகிறது.
மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே எங்கள் பார்வை, அரசியலமைப்பைப் பாதுகாப்பதன் மூலம் இந்தியா என்ற கருத்தை நாங்கள் பாதுகாப்போம். மேலும் மக்கள் தங்கள் மதம் மற்றும் கலாசாரத்தைப் பொருட்படுத்தாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், இந்தியாவில் வாழச் சுதந்திரமும் வசதியும் இருப்பதை உறுதி செய்வோம்.மோடி, அமித் ஷா
இந்தியா கூட்டணி நாட்டின் 60 சதவிகித வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மிசோரம் மாநிலத்தில் வேலைவாய்ப்பு என்பது பல பிரச்னைகளுக்கு மத்தியில் பெரும் கவலையாக இருக்கிறது என்பதையும், இந்த சவால்களைக் காங்கிரஸால் சமாளிக்க முடியும் என்பதையும் மிசோரம் இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
"ஜனவரியில் கூட்டணி அமைத்து, தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்!" - சொல்கிறார் பிரேமலதா
http://dlvr.it/Sxbbdq

Tuesday, 17 October 2023
`செந்தில் பாலாஜி ரூ.67 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது!' - ED | ஹைகோர்ட்டில் அனல்பறந்த விவாதம்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். ஜாமீன் கோரி ஏற்கெனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தற்போது மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையைக் குறிப்பிட்டு வாதிட்டார்.
அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், நீதிமன்றமே எந்தவொரு மருத்துவரையும் நியமித்து செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
வேலை பெற்று தருவதாகக் கூறி 1.34 கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கிக் கணக்குகளையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததிலிருந்தே செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்பது நிரூபணமாவதாகக் குறிப்பிட்ட அவர், உள் நோக்கத்துடன் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 67.75 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பது, தற்போது தெரிய வந்திருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் எனவும், செந்தில் பாலாஜிக்கு அது போன்ற நிலை ஏற்படவில்லை எனவும் வாதிட்டார். மேலும், செந்தில் பாலாஜியின் கால் மரத்துபோவது சமீபத்தில் ஏற்பட்டது அல்ல எனவும் அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்தப் பிரச்னை இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றம் - செந்தில் பாலாஜி
மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கெனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் எனக் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், அவர் காட்சிகளை கலைத்துவிடுவார் எனவும் வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா... செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியைக் கலைப்பார் என அமலாக்கத்துறை கூறுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன, என கேள்வி எழுப்பினார்என்.ஆர்.இளங்கோ
செந்தில் பலாஜி தரப்பில், அவர் நிச்சயமாக ஆதாரங்களை கலைக்க மாட்டார். ஆதாரங்களை கலைக்க செந்தில் பாலாஜி முயலக்கூட மாட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையிடம் இருக்கும்போது, அவற்றைக் கலைக்க முடியாது எனத் தெரிவிக்கபட்டது. இதய அறுவை சிகிச்சை சாதாரணமானது என அமலாக்கத்துறை கூறுகிறது என்றும், ஆனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தால் இதேபோல கூறுவார்களா எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கில், செந்தில் பாலாஜி குற்றம் செய்தார் என்பதை அமலாக்கத்துறையால் நிரூபிக்கவே முடியாது. அமலாக்கத்துறை தரப்பில், சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்றக் காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்ற நிலை இருந்தால் மட்டுமே, மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியும். ஆனால், அது போன்ற நிலை செந்தில் பாலாஜிக்கு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில், ஓர் இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, உட்காரவோ செந்தில் பாலாஜியால் முடியவில்லை எனக் கூறுகிறார்கள் என்றும், ஆனால் அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்க வேண்டுமென யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
"நீங்கள் ஏன் பாஜக-வில் இணையக் கூடாது எனக் கேட்டிருக்கின்றனர்" - செந்தில் பாலாஜி வழக்கில் கபில் சிபல்
http://dlvr.it/SxXzvh

பெண்ணுக்குக் கொடுமை, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு வெளிநாடு செல்ல அனுமதி தந்த கேரள உயர் நீதிமன்றம்!
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ (கணவர் அல்லது உறவினர்களால் பெண்ணுக்குக் கொடுமை) என்ற தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வெளிநாடு பயணம்இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்னை... கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பங்குகள் என்னென்ன?
பெண்ணுக்குக் கொடுமை செய்த குற்றத்தில் சரணடைந்த ஒருவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் இறுதி அறிக்கையை இன்னும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், தான் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைத்ததாகவும், இனியும் ஒத்துழைப்பதாகவும், தற்போது தனக்கு ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படிக்க சீட் கிடைத்துள்ளதால் தான் அங்கு செல்ல அனுமதி வேண்டும் எனவும் முதலில் கேரள கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதிகள், அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது இந்த வழக்கையும், விசாரணைக்கு அவர் ஒத்துழைத்த விதத்தையும் ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். அந்த நபர் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளதாகவும் விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாத காரணத்தால் படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கான அவரது உரிமையை பறிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.தீர்ப்புடிசிஎஸ் கொடுத்த சூப்பரான அறிவிப்பு... பங்கு விலையில் தாக்கம் எப்படி இருக்கும்?
மேலும், ’சரணடைந்த நாளில் இருந்து அவர் வெளிப்படையாக, மற்றும் எந்த பாதிப்பும் இல்லாமல் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல் நீதிமன்றம் கூறிய அனைத்து விதிமுறைகளையும் முறையாகக் கடைப்பிடித்துள்ளார். எனவே அவரின் உரிமையை பறிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற அவர் ஆஸ்திரேலியா செல்லலாம். அங்கு அவர் வசிக்கும் முகவரி மற்றும் இதர விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
http://dlvr.it/SxXzds