இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருக்கும் இந்திய பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அரசு மரியாதையுடன் நேற்று வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டுக்கும் இடையிலும் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அபுதாபியில் சயீத் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் புலம்பெயர் இந்தியர்களுடன் மோடி உரையாடும் வகையில் `அஹ்லான் மோடி' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மோடி - ஷேக் முகமது பின் சயீத்
அதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ``இன்று எனது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க இங்கு வந்திருக்கிறேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூலை முடுக்குகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து அபுதாபியில் புதிய சரித்திரம் படைத்திருக்கிறீர்கள் நீங்கள். அனைவரின் இதயங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
வாழ்நாள் முழுவதும் என்னோடும் உங்களோடும் இருக்கும் நினைவுகளைச் சேகரிப்போம். உங்களின் 140 கோடி சகோதர சகோதரிகளிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி கொண்டுவந்திருக்கிறேன். அந்த செய்தி என்னவென்றால், பாரதம் உங்களைப் பற்றி பெருமை கொள்கிறது. நீங்கள் நம் நாட்டின் பெருமை.மோடி
நான் முதல்முதலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு-க்கு 2015-ல் வந்தது எனக்கு நினைவிருக்கிறது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகான இந்தியப் பிரதமரின் முதல் ஐக்கிய அரபு எமிரேட் பயணம் மேற்கொண்டது அது. அப்போது ராஜதந்திர உலகம் எனக்கு புதிது. அப்போதைய பட்டத்து இளவரசரும், இன்றைய ஐக்கிய அரபு எமிரேட் அதிபரும் தனது ஐந்து சகோதரர்களுடன் என்னை வரவேற்க விமான நிலையத்துக்கு வந்தார். சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் இன்றும் விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்தார்.மோடி - ஷேக் முகமது பின் சயீத்
அவரின் அரவணைப்பும் பாசமும் ஒரே மாதிரியாக இருந்தது. ஷேக் முகமது பின் சயீத்தை நான் சந்திக்கும் போதெல்லாம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வளர்ச்சியில் உங்கள் பங்கை அவர் பாராட்டுகிறார். ஐக்கிய அரபு அமீரகம், தனது உயரிய சிவிலியன் விருதான 'ஆர்டர் ஆஃப் சயீத்' விருதை எனக்கு வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மரியாதை எனக்கானது மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களுக்குமானது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இன்று ஒவ்வொரு இந்தியனின் குறிக்கோள்.
பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடு நம் இந்தியா. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட நாடு இந்தியா. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த நாடு எதுவென்றால் அதுவும் நம் இந்தியா. நிலவின் தென் துருவத்தை அடைந்ததும், ஒரே நேரத்தில் 100 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்ததும் நமது இந்தியா.வெளிநாடு வாழ் இந்தியர்கள்
5G தொழில்நுட்பத்தைச் சொந்தமாக உருவாக்கி அதை விரைவாக வெளியிட்ட நாடும் நம் இந்தியா. இன்று உலகின் அனைத்து முக்கிய மேடைகளிலும் இந்தியாவின் குரல் ஒலிக்கிறது. எங்கெல்லாம் நெருக்கடிகள் ஏற்படுகிறதோ, அங்கு முதலில் சென்றடையும் நாடுகளில் இந்தியாவின் பெயரும் இருக்கும். இன்றைய வலிமையான இந்தியா மக்களுடன் நிற்கிறது.பிரதமர் மோடி
உங்கள் பிரதமர் மோடி, மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று உறூதி அளித்திருக்கிறார்" என்று கூறினார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று துபாய் நகரில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYFarmers Protest: `6 மாதத்துக்கான உணவு பொருள்கள்’ - டிராக்டரில் டெல்லியை நெருங்கிய பஞ்சாப் விவசாயிகள்
http://dlvr.it/T2kGns