புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த 2-ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் விவேகானந்தன், கருணாஸ் என இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொலை செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து ஒட்டுமொத்த புதுச்சேரியும் போராட்டக்களமாக மாறியது. அரசியல் கட்சிகள், சமூக பொதுநல அமைப்புகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்களில் குதித்தனர்.புதுச்சேரி சிறுமி கொலை | போராட்டங்கள்
முத்தியால்பேட்டை, சோலை நகர் மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக வணிகர்கள் தாங்களாகவே கடைகளை திறக்கவில்லை. இந்த நிலையில் சிறுமியின் உடல் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதை கலாசாரத்திற்கு எதிராகவும் இந்தியா கூட்டணியும், அ.தி.மு.க-வும் தனித்தனியே இன்று பந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன் தொடர்ச்சியாக தனியார் பள்ளிகள் விடுமுறையை அறிவித்தன.
அதேபோல காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதன்படி இன்று காலை முதல் பந்த் போராடம் தொடங்கியது. புதுச்சேரி அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும் அந்தப் பேருந்துகளும் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை புதுச்சேரியில் எல்லைகளிலேயே திருப்பி விடப்படுகின்றன. அதனால் அங்கிருந்து புதுச்சேரி வரும் பயணிகளையும், புதுச்சேரியில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளையும் தனியார் வாகனங்களில் எல்லைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர் போலீஸார்.புதுச்சேரி சிறுமி கொலை |பந்த்
பள்ளிகளைப் பொறுத்தவரை பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கும் நிலையில், தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு எந்த தடையையும் ஏற்படுத்த மாட்டோம் என்று பந்த போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன. அதேபோல பெரிய மார்க்கெட், வர்த்தக வீதியான நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளிலும், கிராமப்பகுதிகளில் உள்ள கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்தமாக முடங்கியிருக்கிறது புதுச்சேரி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY`போதை நகரமாக மாறியதுதான் சிறுமி கொலைக்குக் காரணம்!’ - புதுச்சேரி அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு
http://dlvr.it/T3nk1w