'தி.மு.க-வை வீழ்த்த அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்' என்று பல மாதங்களுக்கு முன்பாக சூளுரைத்தார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கும் நிலையில், நிலையான ஒரு கூட்டணியை அமைக்க முடியாமல் எடப்பாடி தரப்பு திண்டாடுவதாக சொல்கிறார்கள் உள்விவரங்களை தெரிந்தவர்கள்.எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
அ.தி.மு.க கூட்டணியில் இருந்த த.மா.கா ஜி.கே வாசன், ஜாண் பாண்டியன், ஏ.சி.சண்முகம், தேவநாதன் என சிறிய கட்சித் தலைவர்களை பா.ஜ.க தன்னோடு இழுத்துக் கொண்டு போய்விட்டது.
நடிகர் சரத்குமாருடன் அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தநேரத்தில், அவரை கூட்டணிக்குள் கொண்டு வந்ததுமட்டுமல்லாது, அவரது கட்சியையே கலைத்து, அவரை மொத்தமாக தள்ளுள் இழுத்துக் கொண்டுவிட்டது பா.ஜ.க.
அதேபோலதான், தைலாபுரம் தோட்டத்துக்கு சண்முகத்தை அனுப்பி பா.ம.க-வுடன் தொகுதி பங்கீடு வரை பேசி 'சரி' செய்து வைத்திருந்த நிலையில், அதையும் முக்கால் வாசி பாஜக தன்னுள் இழுத்துக் கொண்டுவிட்டதாக சொல்கிறார்கள். இரண்டொரு நாளில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். தே.மு.தி.க-வும் என்ன முடிவு எடுக்கபோகிறதென்று புதிராகவே இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பெரிய கட்சிகள் இல்லாத நிலையில் தேமுதிக, சற்று அதிகமாகவே டிமாண்ட் செய்கிறது என்கிறார்கள். அன்புமணி, ராமதாஸ், பிரேமலதா
இந்நிலைமையில் அ.தி.மு.க-வின் நிலைமை குறித்து அங்கிருக்கும் சீனியர்களிடம் பேசினோம்.
" பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால், இரண்டு விஷயங்கள் தனக்குச் சாதகமாக நடக்கும் என எதிர்பார்த்தார் எடப்பாடி. ஒன்று, தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு, ஒருசில கட்சிகள் தங்கள் பக்கம் வருமென நினைத்தார். அவர் நினைத்ததுபோலச் சலசலப்பு ஏற்பட்டதே தவிர, யாரும் எங்கள் பக்கம் வரவில்லை. போதாக்குறைக்கு திமுக கூறுவதுபோல, கூட்டணி முறிவை நாடகமென்று அவர்களும் விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இரண்டாவது, ஏற்கெனவே எங்களுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகள், ‘அ.தி.மு.க-வுடன்தான் பயணிக்கிறோம்’ என்பதை அவர்களே அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தார். அந்தக் கணக்கும் தப்பாகிப்போனது. பாமக-வை கூட்டணிக்கு கொண்டுவந்தால், வடமாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை நோக்கிய பயணம் கொஞ்சம் எளிதாகும் என்பதுதான் எடப்பாடியின் கணக்கு. அதற்காகதான், வாரம் இருமுறை தைலாபுரத்தோட்டத்துக்கு படையெடுத்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். தொகுதி பங்கீட்டு குழுவும் சில ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது.ராமதாஸ் - சி.வி.சண்முகம்
பா.ம.க-வை இறுதியாக 7-ல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஆனால், ராஜ்யசபா சீட்டுக்கு வாய்ப்பே இல்லை என்று கறாராக சொல்லிவிட்டது தலைமை. அதன்படி, தேர்தல் பசைகளையும் கொடுப்பதாக வாக்கு. இதை வைத்துதான் தேமுதிகவை சரிக்கட்டி, மூன்று தொகுதிகள் ஒதுக்க முடிவானது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நான்குவரை கொடுக்கலாம் என்று பேசப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ, புரட்சி பாரதம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட் கொடுத்து இலை சின்னத்தில் களமிறக்கி, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க-வுக்கு 3 போக, புதுச்சேரி உட்பட 30 தொகுதிகளில் இலை சின்னத்தில் களமிறங்க எடப்பாடி ஆயத்தமாகினார்.
ஆனால், ஒருவாரத்துக்குள் எல்லாம் தலைகீழாகிவிட்டது. பா.ம.க-வை முக்கால்வாசி பா.ஜ.க விழுங்கிவிட்டது. இனி பாமக எங்கள் பக்கம் வருவது கடினம்தான். தேமுதிகவின் முடிவை யாராலும் கணிக்க முடியாது.ராமதாஸ், மோடி, அன்புமணி
தற்சமயம் அ.தி.மு.க-வின் கைவசம் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் என்று எதுவுமே இல்லை. புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ தவிர அடையாளம் தெரியாத கட்சிகளையே ஒரு டஜன் வைத்திருக்கிறது அ.தி.மு.க. இதுவே ஒருவித சுணக்கத்தைக் கட்சி நிர்வாகிகளிடம் ஏற்படுத்தியிருக்கிறது. ‘எந்தத் தொகுதி கூட்டணிக்குச் செல்கிறது... எங்கே நாம் போட்டியிடப்போகிறோம்... வலுவான கூட்டணி இல்லாமல் கணிசமான வாக்குகளாவது பெற முடியுமா...’ என நிர்வாகிகள் பலரும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.பிரதமர் மோடி
இது தேர்தலுக்கு முந்தைய பலவீனமாகதான் கட்சிக்குள் பேசப்படுகிறது. இதை சரிசெய்யும் கடமை தலைமை இருக்கிறது. தி.மு.க தனது கூட்டணியை அறிவித்து தேர்தல் பணியை முதல் ஆளாக தொடங்கிவிட்டது. 'தாழ் இட்டவன் தாழ் திறக்க வேண்டும்' என்பதுபோல, கூட்டணி குறித்த முடிவை இழுத்தடிக்காமல், திடமாக ஒரு முடிவை தலைமை மிக விரைவாக எடுக்கவேண்டும். இல்லையென்றால் தாமதமே பெரும் பலவீனமாகிவிட வாய்ப்பு இருக்கிறது." என்றனர் விரக்தியுடன்.
மறுபக்கம் எடப்பாடி தரப்பு ஆள்களோ, ``கூட்டணியால் அதிமுக-வுக்கு எந்த சிக்கலும் இல்லை. கட்சிகள் குறைந்தால், அதிகபடியான இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிட்டும். அதுவும் வாக்கு சதவிகிதம் உயரவே வழிசெய்யும்.” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T40cjD