திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், கார்த்தி சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், ‘‘ ‘தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கியது செல்லுபடியாகாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பால், யார் யாரெல்லாம் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள், எந்தெந்த கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள் சென்றது? என்ற விபரங்களும் வெளிவந்திருக்கிறது. வெளிப்படையான ஒரு உண்மையும் தெரியவந்திருக்கிறது. ஒரு கம்பெனியில் ரெய்டு செய்கிறார்கள். ரெய்டு நடந்த உடனேயே அந்தக் கம்பெனியில் இருந்து பெரியத் தொகை பா.ஜ.க-வுக்கு நிதியாகப் போகிறது. ஒரு கம்பெனிக்குக் கான்டிராக்ட் கொடுக்கிறார்கள். அந்த கம்பெனியில் இருந்தும்கூட பெரியத் தொகை நன்கொடையாக பா.ஜ.க-வுக்குப் போகிறது. அதற்கும் மேலாக சில கம்பெனிகள் தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. கார்த்தி சிதம்பரம்
இதைவிட சில கம்பெனிகளின் லாபம் சொற்பமாக இருக்கிறது. ஆனால், லாபத்தைக் காட்டிலும் கோடிக்கணக்கிலான மடங்கிற்கு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சில கம்பெனிகள் டேர்ன்ஓவரையும் விட அதிகமாக நன்கொடை தந்திருக்கின்றன. இதிலிருந்து என்னத் தெரிகிறது?. வருமானவரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு பா.ஜ.க வசூல் செய்கிறது. சுதந்திர இந்தியாவில், அப்பட்டமான இப்படியொரு லஞ்ச ஊழலை பார்த்திருக்க முடியாது. உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைத்து, நன்கொடை கொடுத்த நிறுவனங்களின் முதலாளிகள் யார்? அவர்களுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? என்பதை வெளியே கொண்டு வர வேண்டும்.
அதேபோல ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் என்னைப் பொறுத்தவரை பாராளுமன்ற ஜனநாயகத்துக்கே விரோதமானது. அதை ஆரம்பிக்கும் முன்பு ஒரே நாளில் தேர்தலை நடத்தச் சொல்லுங்கள். எதற்கு ஒன்றரை மாதம், ஏன் ஏழு கட்டங்களாக நடத்துகிறார்கள்?. ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஜூன் 4-ம் தேதி வரைக் கொண்டுச்செல்கிறார்கள். பிரதமரின் டிராவல் புரோகிராமிற்கு ஏற்றவாறு, எங்கெல்லாம் டூர் போட்டிருக்கிறார்களோ பார்த்துவிட்டு அவரது டிராவல் மேனேஜரிடம் கேட்டுவிட்டு இந்தத் தேர்தலை நடத்துகிறார்கள். விசித்திரமாக இருக்கிறது. டூர் பிளானை வாங்கிக்கொண்டு தேர்தல் தேதி அறிவித்திருக்கிறார்கள். பிரதமர் மோடி
அகண்ட பாரதத்தில் வேண்டுமானால் 400 தொகுதிகளுக்குமேல் பா.ஜ.க ஜெயிக்கலாம். அதாவது இரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் இதெல்லாம் சேர்த்தால்தான் அவர்கள் சொல்லும் ‘அகண்ட பாரத்’. அந்த நாடுகளிலுள்ள பாராளுமன்றத் தொகுதிகளை வேண்டுமானால் சேர்த்துக்கொண்டு ‘பகல் கனவு’ காணலாம். பா.ஜ.க என்பது இந்தி, இந்துத்துவா அரசியல் கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தி பேசாத மாநிலங்கள் என்று எடுத்துக்கொண்டால் குஜராத்தை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் அவர்களுக்குச் செல்வாக்குக் கிடையாது. காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் பா.ஜ.க-வின் ‘பாட்சா’ பலிக்காது. அமலாக்கத் துறையும் பா.ஜ.க-வின் கைக்கூலி நிறுவனம்தான். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறார்கள். நீதித் துறை இதை தடுக்கவேண்டும். இன்றைய அரசியல் சூழலில், கூட்டணி பலம் எல்லோருக்குமே தேவை. கூட்டணிக்கு காங்கிரஸும் வலுசேர்க்கிறது. காங்கிரஸ் கட்சி எந்தப் பக்கம் இருக்கிறதோ மதசார்பின்மையும் அங்குதான் இருக்கிறது. சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளும் எங்களுக்குத்தான்’’ என்றார்.
http://dlvr.it/T4Bnvf