மத்தியில் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைத்ததிலிருந்து `நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக' காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் குறிவைக்கப்படும் எதிர்க்கட்சிகள் முதல், எந்த சரியான காரணமுமின்றி திடீரென இந்திய தேர்தல் ஆணையத்தின் அருண் கோயல் ராஜினாமா வரை தொடர்ந்து பா.ஜ.க அரசு விமர்சனங்களை எதிர்கொள்கிறது.விகடன் கருத்துக்கணிப்பு
இந்த நிலையில்தான் இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்த பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ``தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை மற்றும் பதவிக் கால நிபந்தனைகள்) சட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, தலைமை நீதிபதிக்கு பதிலாக தேர்வுக் குழுவின் மூன்று உறுப்பினர்களில் ஒருவராக கேபினட் அமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தேர்தல் அணையர்கள் நியமனத்தில் மத்திய அரசின் தாக்கமே அதிகமாக எதிரொலிக்கும். இதனால் மத்தியில் ஆளும் கட்சி தனக்கு சாதகமான நபர்களை தேர்தல் ஆணையத்தில் நியமித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மை கேள்விக்குறியாகும்" எனக் குறிப்பிட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.மோடி, அமித் ஷா - ED, CBI, IT
குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக நமது விகடன் வலைதளப் பக்கத்தில், `பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்கும் தேர்தல் ஆணையம், தி.மு.க கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு தனிச் சின்னம் ஒதுக்காமல் பாரபட்சமாகச் செயல்படுத்தப்படுவதாக அரசியல் கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு' குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தோம்.
அதற்கு விடையாக "சரி - தவறு - கருத்து இல்லை" - ஆகிய மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொடுத்திருந்தோம். விகடன் கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பின் முடிவில் `சரி' என 74 சதவிகித வாசகர்களும், `தவறு' என 23 சதவிகித வாசகர்களும், `கருத்து இல்லை' என 3 சதவிகித வாசகர்களும் வாக்களித்திருக்கின்றனர்.பாஜக-வுக்கு `ஷாக்’ கொடுத்த 165 தொகுதிகளின் நிலவரம் - தீவிர ஆலோசனையில் டெல்லி!
http://dlvr.it/T5DCWZ